ஷாலோம் SHALOM ராமதா சத்திரம் பினீக்ஸ், அரிசோனா அ.ஐ.நா 64-01-19 ஆராதனை, என்னுடைய புத்தாண்டினுடைய கூட்டத்தை நாம் இப்பொழுது துவங்கிக் கொண்டிருக்கிறோம். புத்தாண்டிற்குப் பிறகு இதுவே என்னுடைய முதல் உண்மையான தொடர்கூட்டம். ஓ, நான் சில இரவுகள் வீட்டில் இருந்தேன், அதன்பின்னர் அந்த ஹுவாசூகா கோட்டையில் இருந்தேன். அப்படித்தான் நீங்கள் அதை இப்பொழுது உச்சரிப்பீர்களா? நீங்கள் எப்படி ஹுவாச்சுகா என்பதை எச் என்ற எழுத்தில் உச்சரிக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. [ஒலிநாடாவில் காலியிடம்) 2. நாம் அவ்வாறு செய்யவில்லை, நாம் பின்பக்கமாக காணும் கண்ணாடியின் விவகாரத்தை கொண்டிருக்கப் போவதில்லை. பின்பக்கமாக காணும் கண்ணாடியானது நீங்கள் எதைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை திரும்பிப் பார்க்க மாத்திரமே உதவுகிறது. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை காண நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம், பாருங்கள். கடந்த காலத்தில் இருந்தவைகளை, பவுல், "பின்னானவைகளை மறந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்றான். அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். ஒரு மனிதன், நாம் பதினைந்து, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பின்னோக்கிப் பார்க்க முடியும், நான் முதல் முறையாக பீனிக்ஸூக்கு வந்தபோது, அது முதற்கொண்டு, நன்மையும், தீமையும் சம்பவிக்கப்பட்டு, யாவும் தேவனுடைய கரங்களில், நியாயத்தீர்ப்புக்கு செல்லுகின்றன. ஆனால் இப்பொழுது நான் எதிர்நோக்கிக் கொண்டிருப்பது என்னவெனில், வருகின்ற இந்த வருடத்தில், இராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காக, தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன். 3. இப்பொழுது, இந்த பிற்பகல் நான் கிறிஸ்துவுக்குள்ளான சபைக்கு இந்த புத்தாண்டினுடைய செய்தியை பேச விரும்புகிறேன், அதன்பின்னர் நாளை இரவு நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் துவங்கப் போகிறோம். நாங்கள் இடையில் ஜெப அட்டைகளை கொடுப்போம்...ஆராதனை ஏழு, ஏழு முப்பது மணிக்கு துவங்குகிறது என்று நான் நினைக்கிறேன், அதன்பின்னர் சுமார் ஆறு அல்லது ஆறே கால் மணிக்கு, மற்ற ஆராதனைகளில் நீங்கள் தலையிடாதபடிக்கு, உங்களுடைய ஜெப அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கே இருப்பது நல்லது. 4. இந்தத் தொடர் கூட்டத்திற்கு முன்பு இந்தக் கூட்டத்திற்காக எங்களுக்கு இந்த கட்டிடத்தை அளித்த, இங்குள்ள ராமதா நிர்வாகத்திற்கு, நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. 5. இப்பொழுது நாம் வாசிக்கப் போகிற இடத்துக்கு, நீங்கள் வேதவாக்கியங்களைத் திருப்ப விரும்பினால், நான் ஏசாயா 60-ம் அதிகாரத்திலிருந்து 2-ம், 1-ம் மற்றும் 2-ம் வசனங்களிலிருந்து வாசிக்கப் போகிறேன். சங்கீதம் 62:1-8. சங்கீதம் 62:1-8, முதலாவது. தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.) என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.) 6. "கன்மலை" என்று தாவீது பேசுகிற விதம் எனக்குப் பிடிக்கும். "தேவன் என் கன்மலையாயிருக்கிறார்" என்றிருப்பதை அநேக சமயங்களில் நீங்கள் கவனிக்கிறீர்கள். வேதாகமத்தில் ஒரு கன்மலை எதைக் குறிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? கன்மலை என்பது ஒரு "வெளிப்பாடு." 7. பேதுரு கூறினது போல, "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." 8. அவர், "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். இந்தக் கல்லின் மேல், இந்த வெளிப்பாடு..." என்றார். தேவன் அதை அவனுக்கு வெளிப்படுத்தினார். "மாம்சமும் இரத்தமும் இதை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல், இந்த 9. வெளிப்பாட்டின் மேல், நான் என்னுடைய சபையைக் கட்டுவேன்" என்று கூறினார். தாவீது இங்கே, "தேவன் என் கன்மலை, என் வெளிப்பாடு!" என்று கதறுகிறான். 10 இப்பொழுது ஏசாயா 60-ம் அதிகாரத்தில் 1-ம் மற்றும் 2-ம் வசனங்கள். எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 11. நாம் ஜெபிப்போமாக. கர்த்தராகிய இயேசுவே, இந்த வார்த்தைகளின் பேரில் தியானித்துக் கொண்டிருக்கையில், நாங்கள் உம்முடைய கனத்திற்காகவே, இப்பொழுது இந்த ஆராதனையை துவங்குகிறோம். பிதாவே, எங்களை ஆசீர்வதியும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12. இப்பொழுது, இந்த பிற்பகல் என்னுடைய பொருள் ஷாலோம் என்ற ஒரு வார்த்தையாகும். எபிரெய மொழியில் அதற்கு "சமாதானம்" என்று பொருள். சமாதானம், அல்லது அது ஒரு வாழ்த்துதல், அது "உங்களுக்கு சமாதானம்," அல்லது "வரவேற்கப்படுதல்," "காலை வணக்கம்," எந்த விதமான ஒரு வாழ்த்துதல். ஆனால் நான் இங்கே எபிரெய மொழியில் கண்ட முக்கியமான வார்த்தை, அது அநேக காரியங்களை பொருட்படுத்துகிறது, ஆனால் எல்லாமே ஒரே காரியத்தோடு சம்பந்தப்பட்டதாயிருந்தது, "சமாதானம்." 13. இந்த புத்தாண்டை நாம் சந்திக்கையில், நான் வாசித்தபடி, இருளையும், ஒளியையும் நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் அந்த தாவீது இங்கே பேசுகையில், "கர்த்தருக்குள்ளே நம்பிக்கையாயிருங்கள். உங்கள் நம்பிக்கையை அவர் பேரில் வையுங்கள்" என்று கூறினதை காண்கிறோம். ஏசாயா, "இந்த ஜனங்களின் மேல் காரிருள் வந்து கொண்டிருக்கிறது; ஆனால் சபையானது எழும்பி ஒளியின் மகிமையில் பிரகாசிக்க வேண்டும்" என்றான். 14. எனவே நாம் எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டையும் எதிர்கொள்கிறோம்; கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளுக்காக ஒரு-ஒரு வருத்தம் உண்டு, கிறிஸ்துவின் மகிமையான ஒளியின் எதிர்காலத்திற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் இந்த ஆண்டு முழுவதும் ஜீவிப்போமானால், நாம் செய்திருக்கிற அநேக தவறுகளை நாம் கண்டறிவோம் என்பதில், சந்தேகமேயில்லை, அது ஆதரவாகவும் எதிராகவும் செல்லுகிறபடியால் நாம் அதை எதிர்பார்க்கிறோம். அந்த சராசரி விதியின்படி நாம் இங்கே இந்த ஜீவியத்தில் ஜீவிக்கிறோம். ஆனால் பரிந்துபேச தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற ஒரு மத்தியஸ்தர் நமக்கு இருக்கிறார் என்பதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் தவறு செய்தோம் நம்முடைய தவறுகளை ஒப்புக்கொள்ள நாம் மனப்பூர்வமாய் இருக்கும்போது, அப்பொழுது அவர் அவைகளை மன்னிக்கிறார். அந்த தவறுகளுக்காக அவர் நம்மை மன்னிக்கும்படி கிருபையும் இரக்கமும் நிறைந்தவராயிருக்கிறார். 15. இந்த காரிருளின் பேரில், அது இன்றைக்கு உலகில் அதிகமாக உள்ளது என்றும், எல்லா நேரத்திலுமே இருளடைந்து, இருளடைந்து கொண்டே வருகிறது என்றும், நான் முதலில் பேச விரும்புகிறேன். ஒவ்வொரு வருடமும், நாம் அதைக் காண்கிறோம், ஆவிக்குரிய பிரகாரமாகப் பேசினால், உலகம் இருளடைந்து கொண்டே போகிறது, ஏனென்றால் அவர்கள் இருளில் தடவிக்கொண்டிருக்கிறார்கள். அதிக பாவம் உண்டு. நமக்கு ஏற்பட்டுள்ள ஜனாதிபதியின் படுகொலை, போன்றவற்றை நாம் கடந்து செல்லும்போது, நம்முடைய தேசத்தில் இங்கே ஜனங்கள் கொல்லப்படுகின்றனர். நவீன நாகரீகத்தின் காலத்தில் அது சம்பவிக்கும் என்று நாம் நினைக்கமாட்டோம், ஆனால் நாம் அதை நிச்சயமாக உடையவர்களாயிருக்கிறோம். ஏனென்றால் ஜனங்களின் மேல் காரிருள் உள்ளது. இப்பொழுது, வெளிச்சத்திற்கு மாறாதவர்களுக்கு, வரப்போகும் ஆண்டிற்காக நான் கூறக்கூடிய ஒரே ஒரு காரியம் உண்டு, ஆண்டு செல்ல செல்ல நீங்கள் இருளடைந்து இருளடைந்து கொண்டே போகப் போகிறீர்கள். 16. ஆனால் இந்த புத்தாண்டினுடைய, ஒளியினிடத்திற்கு, திரும்பு வோருக்கு, அப்பொழுது நீங்கள் பிரகாசமாகி பிரகாசிப்பீர்கள், நாம் எதிர்நோக்கியிருக்கிற அந்த பரிபூரண நாளுக்காக, அவருடைய பிரசன்னமாகுதலுக்காக, அங்கே எல்லா இருளும் மறைந்து-மங்கிப் போகும். அதற்கான காரணம் என்னவெனில், இன்றைக்கு ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு, "ஷாலோம்" என்று நான் ஏன் கூறுகிறேன், ஏனென்றால் நாம் அவருடைய ஒளியாயிருக்கிறோம். இயேசு, "நீங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறீர்கள்" என்றார். 17. இப்பொழுது, தீர்க்கதரிசி, "இந்த ஜனங்களின் மேல் காரிருள்; உலகத்தின் ஜனங்கள் மேலும், காரிருள் சூழ்ந்துள்ளது" என்றான். 18. கடந்த சில வருடங்களாக, ஏறக்குறைய என் வயதுடைய சில ஆண்களும் பெண்களுமாகிய நீங்கள், எப்படி ஒவ்வொரு வருடமும், அந்த இருள் அதிகமாகிக் கொண்டே வருவது போன்று தென்படுகிறதை, நீங்கள் கவனித்தீர்களா? அன்றொரு நாள் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நான் என் மனைவியினிடத்தில், "உனக்குத் தெரியும், வருடங்கள் செல்லச் செல்ல, ஜனங்கள் உண்மையான காரியத்திலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லத் துவங்குவது போன்று தென்படுகிறது அவர்கள் இன்னும் நெருங்கி வந்து கொண்டிருக்க வேண்டும்" என்றேன். 19. மனிதர் மத்தியில், நான் கவனித்திருக்கிறேன். தெருக்களில் பாருங்கள், பெரும்பாலான பெண்கள் மத்தியில், தங்களுடைய இச்சைகளையும், அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் கவனித்து, அவர்கள்-அவர்கள் எல்லா நேரத்திலும் மனப்பான்மையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மனிதன் அதிகமாக பெண்களைப் போல் ஆகிக்கொண்டிருக்கிறான், ஸ்திரீகள் அதிகமாக மனிதனைப் போல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள், மேலும் அதை நிறுத்த வழியே இல்லை என்பது போன்று தென்படுகிறது. நான் தேசத்தைக் கடந்து, அந்தக் காரியத்திற்கு எதிராக பிரசங்கித்து, அடுத்த வருடம் திரும்பி வருகிறேன், நான் ஆரம்பித்தபோது இருந்ததைக் காட்டிலும் அது மோசமாக உள்ளது. அது, அந்த ஜனங்கள் சரியானதைச் செய்ய விரும்புகிறார்கள், ஆனால், அவர்கள், அதைக் குறித்த ஏதோ ஒன்று அவர்களைச் சரியாகச் செய்ய அனுமதிக்காது. அது அவர்கள் மீது அழுத்தி, அவர்களை பலவந்தப்படுத்துகிறது. அது-அது முழு பூமியின் மேலும் ஒரு கடுமையான, இருண்ட மூடுபனி போன்றது. பீனிக்ஸில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், ஒரு குழுவாக இருள் திரண்டு கூடிவருவது போல் தெரிகிறது, எல்லா நேரத்திலுமே மிகவும் அடர்த்தியாகவும், அடர்த்தியாகவும், உண்மையான ஆண்மையை, உண்மையான பெண்மையை திக்குமுக்காடச் செய்து கொண்டிருக்கின்றன. நான் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். 20. மேலும், அவர்கள், அது போன்று தென்படுகிறது...அது சபை களுக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அதன்பின்னர் நீங்கள் எழும்பி, அதற்கு எதிராக ஏதாவது ஒன்றைக் கூறும்போது, அப்பொழுது அவர்கள் அதைச் செய்வதற்காக உங்களைக் கண்டனம் செய்கிறார்கள். பாருங்கள், அது வருவதை உங்களால்-உங்களால் காண முடியும், அதன்பின்னர் நீங்கள் அதற்கு எதிராக பேசும்போது, யாரோ ஒருவர் அதை தவறாக புரிந்து கொள்கிறார். சில சமயங்களில் ஸ்திரீகள் அதைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், மனிதன் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான மனப்பான்மையை எடுத்துக்கொள்கிறார்கள். 21. மனிதன் சில சமயங்களில், நல்ல மனிதன், அப்படிப்பட்ட காரியங்களை சமாளிக்க வேண்டியதாயுள்ளது அவர்கள் சார்ந்துள்ள மார்க்க ஸ்தாபனங்களில் தங்களுடைய உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஏனென்றால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை யென்றால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள், அதன்பின்னர் அவர்கள்-அவர்கள் தனிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட ஜனங்களிடத்திலிருந்து ஒருமுறை விலக்கி வைக்கப்பட்டு, அதன்பின்னர் வேறொருவரோடு சேருவது கடினமாயுள்ளது, ஏனென்றால் ஒருமுறை நீங்கள் இந்த மற்றொரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அப்பொழுது, "இங்கே என்ன நடந்தது?" என்று கேட்டனர். அப்படியானால் நீங்கள் உங்களுடைய திடநம்பிக்கைகளோடு நிற்க வேண்டும், அல்லது உங்களுடைய சொந்த நம்பிக்கையில் செல்ல வேண்டும் அல்லது உங்களுடைய நம்பிக்கைகளை மறுக்க வேண்டும். எனவே அது ஜனங்களை உண்மையாகவே கடினமாக்குகிறது. 22. மனிதன் இருக்க வேண்டிய, அந்த உண்மையான நிலையை நீங்கள் காண முடியாது என்பது போன்ற, நேரமாய் இது தென்படுகிறது. நான்...அதை ஆவிக்குரியப் பிரகாரத்திலிருந்து இப்பொழுது மாம்ச பிரகாரத்திற்கு திரும்பக் கொண்டு சென்றாலும், நான்...வெல்வெட் இளஞ்சிவப்பு காலணிகளை அணிந்த அந்த மனிதர், அது போன்ற எல்லா வகையான பொருட்களையும் அணிந்திருப்பதாக எனக்குத் தோன்றியது, அவர்கள் அதிகமாக பெண்களைப் போல் ஆகிவிட்டனர் போலும். ஸ்திரீகள் சிகரெட்டுகளை புகைக்கிறார்கள், இப்பொழுது அவர்கள் சுருட்டுகளை வைத்துள்ளனர், அவர்கள் வெறுமனே... தங்களுடைய தலைமுடியை ஆண்களைப் போல வெட்டிக் கொள்கிறார்கள்; அந்த அழகான பெண்மணிக்கு, ஏதோ ஒன்று போய்விட்டது போன்று தென்படுகிறது. உண்மையான ஆண்மைத் தன்மை கொண்ட மனிதன் போய்விட்டான்; அவன் நினைக்கத் தோன்றுகிறதெல்லாம், மறுபக்கத்தில் உள்ள ஏதோ ஒரு தீய காரியத்தைக் குறித்து தான். 23. ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே அது இருக்கிறது என்று நினைக்கிறேன், "ஒரு மனிதனுடைய இருதயத்தில் உள்ள ஒவ்வொரு சிந்தனையும் தொடர்ந்து பொல்லாததாகிக்கொண்டே போகிறது." நம்முடைய-நம்முடைய நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை தணிக்கை செய்யப்படாதவை. மனிதன் கிட்டத்தட்ட, எந்தக் காரியத்தையும், அவர்கள் விரும்புகிறதைக் கூற முடியும், அருவருப்பான, அற்பமான கேலிப் பேச்சுக்களை சத்தியம் செய்து, ஒரு மது அருந்தும் அறையில் கூட பேசக் கூடாது, சொல்லக்கூடாது. அதே சமயத்தில் அவர்களால் அதை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கூறி, அதை ஜனங்களுடைய வீடுகளுக்கு நேரடியாக அனுப்ப முடியும். அந்த காரிருள் முழுக் காரியத்தையும் மூடியுள்ளது போன்று தென்படுகிறது. முழு உலகமும் மாசுபட்டதாகத் தென்படுகிறது. 24. இப்பொழுது, அநேக வருடங்களாக, நான் தேவனுடைய வார்த்தையை, ஒரு நியமத்தை பற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் இருந்ததைக் காட்டிலும் இந்த வருகின்ற வருடத்தில் அந்த நியமத்தை கடைபிடிக்க நான் அதிக தீர்மானமாயிருக்கிறேன், பாருங்கள், அந்த வார்த்தையோடு நேராக நில்லுங்கள். இப்பொழுது, நான் சாமார்த்தியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று எவரேனும் தங்களுடைய சிந்தையில் நினைத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், அப்படியானால், சகோதரனே, சகோதரியே, நீங்கள் நிச்சயமாக தவறாக இருக்கிறீர்கள். நான் அதற்குக் செய்யக் கடமைப்பட்டிருப்பதால், நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். நான், நான் அந்த வார்த்தையோடு தரித்திருக்கக் கட்டுப் பட்டிருக்கிறேன். அது என்ன கூறினாலும், தனிப்பட்ட வியாக்கியானம் கூறாமல், அதை அந்தவிதமாகவே கூறுங்கள். இப்பொழுது சிலர் அதை வியாக்கியானித்து, அதை சற்று வித்தியாசமாக தொனிக்கக் கூடும், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது. நான் அறிந்துள்ள ஒரே மொழி என்னவெனில், இங்கே எழுதப்பட்டிருப்பது மாத்திரமே, சரியான வழியில் இது ஒரு வழி என்பதேயாகும். 25. இப்பொழுது, ஒரு சில, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அது இப்பொழுது, அதாவது, என்னுடைய இடத்தில், என்னுடைய சொந்த சபையில், பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில் பேசி, "டூசானுக்கு போ, அங்கே ஏதோ ஒன்று காத்திருக்கிறது" என்றார். நான் இந்த மேடையின் மேல் நின்று, "கர்த்தர் உரைக்கிறதாவது, ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது" என்று உங்கள் ஒவ்வொருவரிடமும் கூறினேன். அநேகமாக நூற்றுக்கணக்கான ஜனங்கள் அதை அறிந்திருக்கலாம். நான் கண்டதை உங்களிடம் கூறினேன். ஐயா, இது என்ன நேரம்? என்ற இந்த செய்தி ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, டூசானுக்கு வடக்கே, ஒரு கூர் நுனிகோபுரம் போன்ற, ஒரு-ஒரு தூதர் கூட்டம் வருவதை நான் கண்டேன்; இந்த வழியில், டூசானுக்கு வடக்கே. அவர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றைக் கூறினர், அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் அங்கே...இப்பொழுது இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அது சம்பவித்தபோது, அங்கே பின்னால் என்னுடன் இருந்த அவர்கள் இருவர். 26. அவர்கள் அதை ஆகாயத்தில் புகைப்படம் எடுத்தனர். அது பத்திரிக்கையில் வெளிவந்தது. நான் ஒரு பிரதியை வைத்திருந்தேன் என்று நினைத்தேன். நான் வைத்திருக்கிறேன். அதுதான் இது. நீங்கள் அதை இங்கே லைஃப் என்ற பத்திரிக்கையில் பாருங்கள், இந்த பிரதி, பரிசுத்த ஆவியானவர் கூறின விதமாகவே அது இருக்கும். 27. நான் இங்கு நின்று கொண்டிருப்பதை நீங்கள் காண்பது போல, அந்த ஏழு தூதர்களும் இயல்பாகவே அங்கே நின்றனர், என்னுடைய வீட்டிற்கு திரும்பிச் செல்லும்படி எனக்கு சொல்லப்பட்டது, காலங்களினூடாக சீர்திருத்தக்காரர்கள் புரிந்து கொள்ளத் தவறியிருந்த இரகசியங்களை, ஏழு முத்திரைகள் வைத்திருந்த, வேதாகமத்தின் இரகசியங்கள், வெளிப்படுத்தப்படும். நான் அந்த ஏழு முத்திரைகளை ஆராய்ந்து பார்த்து, அவைகளில் ஒரு பிழையைக் கண்டறியும்படி எவருக்கும் சவாலிடுகிறேன். பார்த்தீர்களா? புரிகிறதா? ஏனென்றால் அது தேவனுடைய ஆவியின் ஏவுதலினால் அளிக்கப்பட்டது. 28. அதற்கு முன்னர், நான் ஏழு சபைக் காலங்கள் என்ற தலைப்பில் பிரசங்கித்தேன், அதன்பின்னர் என்னுடைய கூடாரத்திலிருந்த கரும்பலகையில் அவைகளை வரைந்தேன். 29. என்னுடைய உபதேசம், நான் இங்கே போதகத்தை பிரசங்கிக்க வில்லை, மகத்தான சுவிசேஷ அடிப்படைகளை தவிர வேறொன்றையும் பிரசங்கிப்பதில்லை; ஏனென்றால் நான் சகோதரர்களோடு கூட இருக்கிறேன், அவர்கள் என்னோடு வித்தியாசப் படக் கூடும், நான் அதை இங்குள்ள ஜனங்களுக்கு முன்பாக அளிக்கவில்லை. நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதைப் போன்ற, வேதத்தின் உண்மையான அடிப்படைகளின் பேரில் தரித்திருக்க முயற்சிக்கிறேன். ஆனால், என்னுடைய கூடாரத்தில் அவர்கள் அதை ஒலிநாடாவில் பதிவு செய்கிறார்கள். நீங்கள் அதை விரும்பினால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள உங்களுடைய போதகர் விரும்பவில்லையென்றால், அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். பாருங்கள், அது உங்களைப் பொறுத்தது. 30. ஆனால் அங்கே, ஏழு சபைக் காலங்களின் பேரில் பிரசங்கித்து, தேவனிடத்திலிருந்து ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள; நிசாயா, சபைக்குள்ளாக எப்படி அந்தகாரத்தைக் கொண்டு வந்தது என்பதைக் குறித்து அவைகளை வரைந்து காண்பித்தேன்; சபை தூதர்கள், செய்தியாளர்கள். அது சரியாக இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு காலை, கடைசி சபைக் காலத்தில் நான் அவைகளை வரைந்தபோது, பதினோரு மணிக்கு, அந்த மகத்தான வெளிச்சம் கட்டிடத்திற்குள் இறங்கி வந்து, கிட்டத்தட்ட இங்கே உட்கார்ந்திருக்கும் இதே அளவுள்ள ஜனங்களுக்கு முன்பாக; அந்த ஜனங்கள் எல்லோருக்கு முன்பாகவும் கீழே இறங்கி வந்து, சுவற்றின் பக்கமாக தன்னைத்தானே மின்னிக்கொண்டு, சபைக் காலங்களை நான் வரைந்திருந்த வண்ணமாகவே சரியாக அவைகளை வரைந்தது. இப்பொழுது, அதை நிரூபிக்க நூற்றுக்கணக்கான சாட்சிகள் அங்கே உள்ளனர். அப்படியே... 31. பாருங்கள், இப்பொழுது, தேவன் காரியங்களை பூமியில் காண்பிப்பதற்கு முன்பு எப்பொழுதுமே வானத்தில் அவைகளை காண்பிக்கிறார் என்பதை நாம் தெளிவாக உணருகிறோம். சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்தது போல. முதலில், ஒரு பரலோக அடையாளம் நடைபெறுகிறது, அதன்பின்னர் பூமிக்குரிய பரலோக அடையாளம் ரூபகாரப்படுத்துகிறது. தேவன் அடையாளங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங் களினாலும் கிரியை செய்து, ஈடுபடுகிறார். அவைகள் எல்லாவிடங்களிலும் உள்ள விசுவாசிகளைப் பின் தொடர வேண்டும். யூதர்கள் எப்பொழுதுமே ஒரு அடையாளத்தையே எதிர் நோக்கி யிருந்தனர், ஏனென்றால் அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அவர்கள் அந்த அடையாளத்தை தேடினார்கள். "அந்த அடையாளத்தை எங்களுக்குக் காண்பியும், அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்." மேலும், அதன்பின்னர், புத்தாண்டில், கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து, சாஸ்திரிகள், தங்களுடைய செய்தியோடு வந்தனர். 32. இப்பொழுது வேதாகமத்தில், சந்திரன் சபையை சுட்டிக்காட்டுகிறது என்பதை, நாம் கண்டறிகிறோம். அது சூரியன் இல்லாத நேரத்தில் பூமியின் மேல் வெளிச்சத்தைக் காட்டுகிறது. வெளிப்படுத்தின விசேஷம், 12-ம் அதிகாரம், அதை உண்மையாகவே விளக்குகிறது, "அந்த ஸ்திரீ தன்னுடைய பாதத்தின் கீழ் சந்திரனையும், அவளுடைய தலையில் சூரியனையும் கொண்டவள்." எப்படியாய் சூரியன் இல்லாத நேரத்தில், சூரியன் மற்றொரு பக்கத்திற்கு செல்லும்போது, சந்திரன் சூரியனை பூமிக்கு பிரதிபலிக்கிறது. சபையானது தேவனுடைய குமாரன் இல்லாத நேரத்தில், இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு பிரதிபலிக்க வேண்டும். நாம் யாவரும் அதை விசுவாசிக்கிறோம். இது ஒரு வினோதமான காரியமாயுள்ளது, எவ்வளவு வித்தியாசமாக இருந்து வந்துள்ளது. 33. ஆனால் இங்கே பேசுகையில், 1933-ல் போப் தன்னுடைய இடத்திலிருந்து, சரியாகக் கூறினால், அல்லது ரோமாபுரியிலிருந்து புறப்பட்டு வந்து, புனித தேசங்களுக்கு விஜயம் செய்கிறார். அவர் இங்கு கூட வருவார். வினோதமான காரியம் என்னவெனில், அவர் ரோமாபுரியை விட்டு புறப்படுவதற்கு ஒரு சில இரவுகளுக்கு முன்னர், அது சரித்திரத்தில் முதன் முறையாக சந்திரன் தோன்றி முழு கிரகணமாக மாறியது. அது என்னவாயிருந்தது? பிரதிபலித்த குமாரனின் ஒளிக்கு நிழலிடுதல். இதில், அவர் வைதீகமான பிதாவினிடத்தில் பேசினார்; அவர்கள் யாவரும் ஒருமித்துள்ளனர், "போப் இதை ஐக்கியத்திற்காகவும், நல்ல அயலகமான ஐக்கியத்திற்காகவும் செய்கிறார்." அது மாம்சபிரகாரமான காதுகளுக்கு, மிகவும் அற்புதமான காரியம் சம்பவிக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஆனால் ஆவிக்குரிய காதுக்கோ, அது இருளாய் உள்ளது. எப்படி சபைகளாகிய நாம், பிரஸ்பிடேரியன்கள், மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தேகோஸ்தேக்கள் அப்படிப்பட்ட ஒரு குழப்பத்திற்குள் எப்போதாவது சேர்ந்து கொள்ளக் கூடும், நம்முடைய வேதாகமம் நமக்கு வித்தியாசமாக போதிக்கிறதை அறிந்துள்ளோமே! அது எனக்கு ஒரு ஆச்சரியமான காரியமாயுள்ளது, அதாவது ஆவியால் நிரப்பப்பட்ட மனிதன் எப்படியாய் அப்படிப்பட்ட இடங்களில் அமர்ந்து, "அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருப்பது ஆவிக்குரிய உணர்வாக இருக்கிறது" என்று கூறுகிறான். எனக்கு, அது பயங்கரமாயுள்ளது. 34. இப்பொழுது, நீங்கள் அதை இங்கே பீனிக்ஸில் பெற்றுள்ளீர்கள் என்று நான் யூகிக்கிறேன். எவரேனும்...சபைக் காலங்களைப் பற்றிய புகைப்படங்களை நான் வரைந்திருந்ததை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நான் யூகிக்கிறேன்...அன்றொரு இரவு, கர்த்தர் அவைகளை ஆகாயத்தில் எப்படி வரைந்தார் என்று பார்த்தீர்களா? அது அங்கே கூடாரத்தில் சரியாக வரையப்பட்ட விதமாகவே. மூன்று வருடங்களுக்கு முன்பு, கூடாரத்தில், பரிசுத்த ஆவியானவர் அதை ஏவுதலால் கொடுத்த விதம் மிகச் சரியாக, பரிபூரணமாயிருந்தது. அது ஆகாயத்தில் சம்பவித்தது. "இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால், எந்த வார்த்தையும் உறுதிப்படுத்தப்படும்." பரிசுத்த ஆவியானவர் முதலில் ஏவுதலினால் அசைவாடினார்; நான் அவைகளை மேடையின் மேல் வரைந்தேன். அதன்பின்னர் அவர் தாமே இறங்கி வந்து, அதைக் குறித்த தம்முடைய ரூபகாரப்படுத்துதலைச் செய்தார், சந்திரனும் ஒளியும் வெளியேறி, வெளியே சென்று, இந்த லவோதிக்கேயா காலத்திற்குள் மீண்டும் முழு இருளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. இதோ அவர் இறங்கி வந்து அதை சந்திரனில் ரூபகாரப்படுத்துகிறார், எல்லா சபைகளும் ஒன்று சேர்ந்து, சபைகளின் கூட்டமைப்பு என்ற ஒரு ஒருங்கிணைப்பில் சென்று கொண்டிருக்கின்றன. 35. ஏசாயா, "பூமியின் மேலும், இந்த ஜனத்தின் மேலும் காரிருள் உள்ளது" என்று கூறினது போல, வியப்பொன்றுமில்லை. 36. ஸ்தாபனத்திற்கு எதிராக பேசுவது செல்வாக்கற்றது என்பதை நான் அறிவேன், ஆனால் அது மிருகத்தின் முத்திரை. அந்தக் காரியம்தான் நம்மை அதற்குள் கொண்டு செல்கிறது. அது மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணுகிறது. கோபப்பட வேண்டும் என்பதற்காக நான் அதைக் கூறவில்லை. சகோதரரே, இது சத்தியமாயிருக்கிறபடியால் நான் அதைக் கூறுகிறேன். அந்த நாள் வரும், அப்பொழுது பீனிக்ஸ் எழும்பும், ஒருகால் நான் போய்விட்டிருக்கலாம், ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அது உண்மை. எப்படியாய் அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் அந்த செய்திகளை ஒரு ரூபகாரப்படுத்தி, காரியங்களை முன்னறிவித்திருக்கிறார், ஒருமுறை கூட தவறி போகவில்லையே! நாம் ஏன் இருளில் தடுமாறுகிறோம்? ஜனங்கள் ஏன் மிகவும் தாமதமாகிவிடும் முன்னர் விழித்தெழு வதில்லை? இந்நாட்களில் ஒன்றில், நீங்கள் ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருக்கும்போது, அது மிகவும் காலதாமத மாகிவிடும், அப்பொழுது அங்கே இல்லை...அப்பொழுது நீங்கள் அதைக் குறித்து வேறொன்றும் செய்ய முடியாது, நீங்கள் அந்த முறைமையில் சிக்கிக் கொள்வீர்கள், அதாவது நீங்கள் அந்த முறைமையால் முத்திரையிடப்படுவீர்கள். 37. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியினால் நிரப்பப்பட்டு, உங்களை விடுதலையாக்கி, மலையின் மேல் அமர்ந்துள்ள ஒரு மெழுகுவர்த்தியைப் போல உங்களை மாற்றக்கூடிய, அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையான கிறிஸ்துவண்டை நீங்கள் ஏன் வரக்கூடாது? அது எவ்வளவு இருட்டாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. "சரி, நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்? மற்றவர்கள்..." கவனியுங்கள், அது மிகவும் இருளாய் இருக்கும்போது, இப்பொழுதுதான் அது பிரகாசிக்க வேண்டிய நேரமாயுள்ளது. அப்பொழுதுதான் வெளிச்சம் நன்றாக பிரகாசிக்கிறது, அது இருளில் இருக்கும்போதே. நாம் எப்பொழுதும் இருளாயிருக்கிற இடத்தில் வெளிச்சத்தை பிரகாசிக்க செய்ய வேண்டும். 38. தீர்க்கதரிசி, "இந்த ஜனங்களின் மேல் காரிருள் சூழ்ந்திருக்கும்" என்று கூறினார், அது நிச்சயமாகவே சத்தியமாயிருக்கிறது. 39. இப்பொழுது சந்திரன் ஒளியைப் பிரதிபலிக்கச் செய்தது எது என்று நாம் கண்டறிகிறோம். தேவன், முதலில், கரும்பலகையில் காண்பிக்கிறார்; அடுத்தபடியாக, அவருடைய சொந்த பிரசன்னத்தினால்; அதன்பின்னர் வானங்களில் அவர் அந்த அடையாளத்தைக் காண்பித்தார். அதன்பின்னர் போப் ரோமாபுரியிலிருந்து, பாலஸ்தீனாவிற்கு சென்றார்; சாதாரண கண்ணுக்கு, ஜனங்கள் கூச்சலிட்டு, முகங்குப்புற விழுந்து, அந்த மனிதனைப் பணிந்தனர். அப்படிப்பட்டவர்களோடு சேர்ந்துகொள்ளும் ஒரு ஊழியக்காரனாயிருப்பதைக் காட்டிலும் அவருக்கு விரோதமான ஒன்றுமில்லை. அவை யாவுமே ஒரே ஆவியாய் உள்ளன. 40. ஜனங்கள் ஒரு காரியம் மாத்திரமே என்று நினைக்குமளவிற்கு அவர்கள் மேல் காரிருள் சூழ்ந்துள்ளது போன்று காணப்படுகிறது செய்ய வேண்டிய காரியம், சபைக்குச் சென்று, ஒரு நல்ல நபராய் இருக்க வேண்டும், உங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து, சில இரகசியமான காரியங்களையும், "நீங்கள் மரிக்கும்போது, தேவன் திறவுகோலை சுழற்றி, உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவியை அவருக்கு மாற்றுவார்." நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நீங்கள் மரிக்கும்போது, உங்கள் மேல் இருக்கும் அந்த ஆவி, அந்தவிதமாகவே நீங்கள் என்றென்றும் இருப்பீர்கள். நினைவிருக்கட்டும், பரிசேயர்கள், சதுசேயர்கள், போன்றவர்கள், மிகவும் பக்தியுள்ளவர்களாயிருந்தனர். 41. தேவன் ஒரு எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார், அவர் எரிச்சலுள்ள வராயிருக்கிறார். அவர் தம்முடைய மனைவி தூய்மையான, ஒரு கன்னியாக, கற்புள்ளவளாக இருக்க விரும்புகிறார், உலகத்தில் ஒன்றுமே அவளுக்குள் இருக்காமல், முழுவதுமாக அவருடைய வார்த்தையை, அவருடைய பாகமாக, நாம் வார்த்தையின் ஒரு பாகமாக இருக்க வேண்டும். கோட்பாட்டின் ஒரு பாகம் அல்ல, வார்த்தையின் ஒரு பாகம் அல்ல; சபையின் ஒரு பாகம் அல்ல, மணவாட்டியின் ஒரு பாகம். சபை ஆக்கினைக்குட்படுத்தப்பட்டது, அது புறம்பான இருளுக்குச் செல்கிறது என்பதை நாம் அறிவோம், ஆனால் மணவாட்டி மேலே செல்கிறாள். 42. இப்பொழுது ஜனங்கள் ஒரு சில விநாடிகள் மாத்திரம் விழித்தெழுந்து, அந்த மகத்தான காரியம் என்னவென்பதை உணர முடிந்தால் நலமாயிருக்கும். பெருமை அதைச் செய்கிறது. ஜனங்கள் உலகத்தின் ஏனையோரைப் போலவே செல்ல விரும்புகிறார்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் உலகத்திற்குரியவர்கள் அல்ல. ஒரு ஸ்திரீ தன்னுடைய சவப்பெட்டியில் படுத்திருக்கும்போது, அவள் தன்னுடைய தலைமுடிக்கு ஒரு விதமான அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள விரும்புவாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்புகிறீர்களோ? அவள் ஒரு சவப்பெட்டியில் அல்லது ஒரு மனிதன் அவ்வாறு படுத்துக்கிடந்தால், அவள் எப்படி உடை உடுத்தப்பட்டிருந்தாள் என்பதற்கு அவள் கவனம் செலுத்துவாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். 43. அந்தக் காரணத்தினால்தான், இன்றைக்கு, நாம் அண்டை வீட்டாரைப் பின்பற்ற வேண்டிய ஏராளமான காரியங்கள் உள்ளன, அல்லது ஏதோ ஒரு ஹாலிவுட் நட்சத்திரம், அல்லது சில நாகரீகங்கள் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு காரியம், நாம் கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் இன்னும் மரித்திருக்கவில்லை என்பதேயாகும். சபைகளோடுள்ள காரியம் என்ன? நாம் இருளில் இருக்கிறோம், இருளில் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். "ஜனங்கள் மேல் காரிருள் உண்டாயிருக்கும்" என்றார். இப்பொழுது ஜனங்கள் மேல் ஒரு காரிருள் சூழ்ந்துள்ளது! 44. இவையனைத்தும் என்ன பொருட்படுத்துகிறது? இதன் பொருள் என்னவென்றால், உலகம்...சந்திரனை மறையச் செய்தது, ஏனென்றால் அந்த சூரியன்...பூமியானது சூரியனின் நிழலுக்குள் சிக்கிக்கொண்டது, அது பூமியின் மேல் தன்னை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. உலகம் நிழலில் மூழ்கியது. சபையோடுள்ள காரியமும் அதுதான். பிரஸ்பிடேரியன்கள், மெத்தோடிஸ்டுகள், பெந்தேகோஸ்தேக்கள் ஆகியோரோடுள்ள காரியமும் அதுதான். அதுதான் நம் எல்லோரோடும் உள்ள காரியமாகும். நாம் பிரதிபலிக்க வேண்டிய ஒளியை உலகம் மூடிவிடுகிறது, அது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு அதில் நுழைகிறது, அவை ஒன்றையொன்று கடந்து செல்லும்போது, அதன் மீது இருளை விழச் செய்கிறது. 45. உலகமானது ஸ்தாபனத்தின் பெயரால், ஏதோ ஒரு கோட்பாட்டின் பெயரால், சபைக்குள்ளாக வந்து, "நாங்கள் மதவாதிகள், இதெல்லாம், இதெல்லாம்," என்று கூறுகிறது, ஆனால் அதே சமயத்தில் இந்த நாளுக்காக தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்த கிறிஸ்துவின் உயிர்த்தெழும் வல்லமையை அது மறுக்கிறது. தேவனுடைய வார்த்தையின் மூலமாக மாத்திரமே வெளிச்சம் இருக்க முடியும். நாம் அதை அறிவோம். தேவன் ஆதியில், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறினார், அங்கே வெளிச்சம் உண்டாயிற்று, அவர் உரைத்திருந்த அவருடைய வார்த்தையின் ரூபகாரப்படுத்துதல். 46. கருமை நிறம், கருமையாகிவிட்டது! உலகம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள பிரதிபலிப்போடு இடையே வந்ததால், அதை கருமையாக்கிவிட்டது. அதுதான் இயற்கையில் அல்லது ஆவிக்குரிய நிலையில் சம்பவித்துள்ளது. அது இயற்கையில் சம்பவித்தது போல, முன் நிழலிடப்பட்டு, நமக்குக் கூறினது போல, சரியாக அதுதான் சம்பவித்துள்ளது. 47. இப்பொழுது, அது எப்படி முடிவிலே வருகிறது என்பதை நீங்கள் பாருங்கள். வாலிபராகிய உங்களில் அநேகர், எப்படியாயினும், நீங்கள் அதைக் காணும் வரை, நீங்கள் மிகவும் வயோதிகராக வேண்டியதில்லை, நீங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வாழ்ந்தால் நலமாயிருக்கும். 48. இப்பொழுது சந்திரன், நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம். லவோதிக்கேயா சபையின் காலத்தில், மற்ற எல்லா சபைகளிலும், லவோதிக்கேயா, கடைசி, வெதுவெதுப்பான சபைக் காலத்தில், கிறிஸ்து சபைக்கு வெளிப்புறத்தில் இருந்தார். வேதாகம வாசிப்பவர் எவரும் அதை அறிவர். வெளிப்படுத்தின விசேஷம் 3, அவர் சபைக்கு வெளியே இருந்து, தம்முடைய வழியை மீண்டும் உள்ளே கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளே வந்தார் என்று ஒருபோதும் கூறவில்லை. "ஆனால் அவர் சிநேகித்தவர் களையெல்லாம் அவர் கடிந்துகொண்டு சிட்சித்தார்." செய்தியானது அவர் நேசித்தவர்களை கடிந்துகொண்டு சிட்சிக்கும். இப்பொழுது, தட்டிக் கொண்டிருந்தார், உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருந்தார்; இருள் அதை அடைத்தது, சரியாக என்ன சம்பவித்தது. பிரகாசித்துக் கொண்டிருக்கிற வெளிச்சம் சீக்கிரத்தில் முற்றிலுமாக அணைக்கப்படும். அவையாவும் சென்று மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உருவாக்கும். அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம், அதுவே முடிவு காலம். 49. தேவன், ஆதியிலே, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தார், அதைத்தான் மீண்டும் தேவன் செய்து கொண்டிருக்கிறார். தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரிக்கிறார். "ஆதியிலே," அவர், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்றார். இப்பொழுது, நினைவிருக்கட்டும், தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பே வெளிச்சம் இருக்க முடியாது. அங்கே வெளியே உள்ள அதே சூரியன் தேவனுடைய வார்த்தையாக, ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறது. பூமியின் மேல் காரிளும், பனியும், மூடுபனியும் பூமியின் மேல் இருந்தது, தேவன், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்றார். இப்பொழுது வெளிச்சம் வரவில்லையென்றால் என்னவாகும்? அப்படியானால் பேசுவது அவருக்கு எந்த நன்மையும் செய்யாது. ஆனால் அவர், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறினபோது, அவருடைய வார்த்தை சரியானதாயிருந்தது என்பதை ரூபகாரப்படுத்த, வெளிச்சம் உண்டானது. அந்த ஒளியினால் நாம் இன்றைக்கு ஜீவிக்கிறோம். 50. தேவன் தம்முடைய ஒளியை இந்த சந்ததிக்கு ரூபகாரப்படுத்துவதே இன்றைக்கு சபையில் நாம் பெற்றிருக்கக் கூடிய ஒரே வெளிச்சம். 51. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒதுக்கப்பட்ட அளவு அவர்களுடைய நாட்களில் சம்பவித்தது. நாம் யாவரும் அதை அறிவோம். தீர்க்கதரிசிகள் காட்சியில் வந்தனர். அவர்கள், கர்த்தருடைய வார்த்தை அவர்களிடம் வந்தபோது, அதைப் புரிந்து கொண்டனர். ஒரு ஞானதிருஷ்டிக்காரன் என்றால், பழைய ஏற்பாட்டில், "வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையையுடைய ஒருவன்" என்று பொருள் படுகிறது. அவர்கள் அதை எப்படி அறிந்திருக்கிறார்கள், ஏனென்றால் அவன் வரப்போகும் காரியங்களை முன்னறிந்திருக்கிறான். அதன்பின்னர் ஒவ்வொரு காலத்திலும், கர்த்தருடைய வார்த்தை அவர்களிடத்தில் வந்தது. 52. இயேசு யோவானிடம், யோவானைக் குறித்து, "அவன் சிறிது காலம் பிரகாசமுள்ள, பிரகாசிக்கிற ஒளியாயிருந்தான்" என்று கூறினார். ஏன்? ஏசாயா, அவன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, "வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம் கேட்கிறது" என்றான். மல்கியா, 3-ம் அதிகாரம், "இதோ, எனக்கு முன்பாக வழியை ஆயத்தம் பண்ணும்படிக்கு என் தூதனை அனுப்புகிறேன்" என்று கூறியுள்ளது. பாருங்கள், அவன்தான் ரூபகாரப்படுத்தப்பட்டிருந்த அந்த வார்த்தையாயிருந்தான். அந்த நாளுக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்த, அவனே ஒளியாயிருந்தான், ஏனென்றால் தேவன் அவனைக் குறித்து உரைத்திருந்த அதே வார்த்தையை அவன் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். 53. இயேசு வந்தபோது, யோவான், "நான் இப்பொழுது மங்கிப்போக வேண்டும்; அவர் காட்சிக்கு வரவேண்டும்" என்றார். அவர் ஒளியாயிருந்தார். காலங்கள் தோறும், எப்படியாய் தேவன் வரப்போகும் அந்த வேளையைக் குறித்து கூறினார்! 54. அந்த குருமார்கள் எப்படி அதைக் காணத் தவறினர்? அவர்கள் எப்படி தவறிப் போனார்கள்? அந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் எவ்வாறு காணத் தவறினர்? அவர், "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" என்றார். சகோதரர்களே, அவர்கள் எப்படி அதைக் காணத் தவறினர்? அவர்கள் அதைச் செய்வார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயாகும். 55. இன்றைக்கும் அது அவ்வாறே உள்ளது, அந்த காரிருள் ஜனங்களின் மேல் வந்து கொண்டிருக்கிறது. நாம் இங்கே இருக்கிறோம்! தேவன் தம்முடைய வார்த்தையை இந்நாளில் வெளிப்படுத்தும்படிக்கு பங்கிட்டுள்ளார், அது மாத்திரமே நாம் பெற்றுள்ள வெளிச்சம், தேவன் அந்த வார்த்தையை யாராகிலும் வெளிப்படுத்தப் அனுமதிக்கப் போகிறார். யாரோ ஒருவர் அதைச் செய்யப் போகிறார். அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார், அவர் எப்பொழுதும் செய்தது போலவே சரியாக கிரியை செய்கிறார். 56. அவர் தம்முடைய கிரியையின் மாதிரியை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவேயில்லை. என்ன சம்பவிக்கும் என்று அவர் தீர்க்கதரிசனம் உரைத்து, அதன்பின்னர் அவர் யாரோ ஒருவரை அனுப்பி அதை ரூபகாரப்படுத்துகிறார். அது கோடிக் கணக்கானோரின் தலைக்கு மேல் செல்கிறது, ஏனென்றால், அந்த நேரத்தில் பூமியை இருள் சூழ்கிறது. ஜனங்கள் வெளிச்சத்தைக் காட்டிலும் இருளையே விரும்புகின்றனர், ஏனெனில் இருள் மிகுந்த இன்பம் கொண்டது. 57. அண்மையில் நான் ஒரு ஹாலிவுட் நாடகத்தைப் பார்த்தேன், அதில், "சூரியன் அஸ்தமித்த பிறகு ஜீவன் தொடங்குகிறது" என்று கூறப்பட்டது. அப்பொழுதுதான் மரணம் துவங்குகிறது; இந்த இரவு விடுதிகள், மற்றும் அவர்கள் அங்கே வாழ்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். 58. தேவன், ஆதியிலே, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தார். அவர் எப்பொழுதுமே அதைச் செய்திருக்கிறார். அவர் என்ன செய்கிறார்? அவர் வருகிற வெளிச்சத்தைக் கொண்டு அதை அழுத்துகிறார், அவர் பூமியின் மறுபக்கத்திற்கு இருளை அழுத்துகிறார். 59. அதுதான் இப்பொழுது சரியாக நிறைவேறப் போகிறது. பகலுக்கு சற்று முன்புதான். விடிவெள்ளி நட்சத்திரம் வரவிருக்கும் நாளை வாழ்த்துவதற்காக வந்துவிட்டது. பரிசுத்த ஆவியானவர் அதன் ஒளியைக் காட்டுகிறார். வெளிச்சமும் இருளும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட வேண்டிய ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது. சபையும் அதனுடைய ஒழுங்கும் இந்நாளின் ஒழுங்கை எடுத்துக்கொள்ளும்; கிறிஸ்துவும் அவருடைய ஒளி- வார்த்தை வாக்குத்தத்தமும் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும். அது மாத்திரமே அவர்கள் செய்ய விடப்பட்டிருக்கிறது. இது ஒரு நாளாய், இன்றைக்கு, அவருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற அநேகருக்கு ஒரு புதிய நாளின் விடியலாயுள்ளது. 60. அநேக, நல்ல உத்தமமான ஜனங்கள் இன்றைக்கு, அதுதான் அவர்களுடைய இருதயங்களை எரிக்கிறது, மரியாளும், யோசேப்பும் போன்ற அநேக நல்ல உத்தமமான ஜனங்கள். அவர்கள் பண்டிகையிலிருந்து வந்து கொண்டிருந்தனர், அவர்கள் இயேசுவைக் காணத் தவறினர். இன்றைக்கும் அநேக ஜனங்கள் அவர் அவர்களோடு இருக்கிறார் என்று எண்ணி அதையே செய்கின்றனர். இப்பொழுது, தேவனுடைய வார்த்தை எவ்வளவு பிழையற்றது என்பதை உங்களுக்கு காண்பிக்கும்படியாக, இந்த சிறு வெளிச்சத்தை நான் உங்களுக்கு வைக்க விரும்புகிறேன். 61. இந்த பிற்பகல் இங்கே கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும், இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிக்கிறோம். அவர் கன்னிப் பிறப்பென்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் இங்கே பூமியின் மேல், சர்வ வல்லமையுள்ள தேவன் தங்கியிருந்த கூடாரமாக இருந்தார். வெறுமென ஒரு தீர்க்கதரிசி அல்ல, வெறுமனே ஒரு சாதாரண மனிதன் அல்ல, ஆனால் தேவன் தாமே ஒரு மனிதனின் ரூபத்தில் வெளிப்பட்டார். அவர் இம்மானுவேல், "தேவன் நம்மோடிருக்கிறார்." நாங்கள் அதை நம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். மார்த்தாள் அல்லது... 62. சரியாகக் கூறினால், மரியாளும், யோசேப்பும், இயேசு தங்களோடு இருப்பதாக நினைத்து, அவர் தங்களோடு இருப்பதை உணர்ந்துகொண்டார்கள், "அது சரியாக இருக்க வேண்டும். அவர் நம்மோடு இருக்க வேண்டியவராயிருக்கிறார்" என்று எண்ணினர். ஆனால் அவர்கள் வருத்தகரமாக தவறாக புரிந்து கொண்டனர். அவர் அவ்வாறு இருக்கவில்லை. 63. இன்றைக்கு அநேக நல்ல ஜனங்கள் அவ்விதமாகவே இருக்கின்றனர். அவர்கள் வேளையானது நெருங்கி வருவதைக் கண்டு, ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து, அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர் அவர்களோடு இருக்கிறார் என்று நினைத்து, அவர்கள் போய் சபையில் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் போதகருடன் கைகுலுக்குகிறார்கள், அவர்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான் என்று நினைத்து, "அவர் அவர்களுடன் இருக்கிறார்" என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வழியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான், இயேசு அவர்களோடு இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சகோதரனே, சகோதரியே, மரியாளைப் போல, யோசேப்பைப் போல, பண்டைய, உண்மையான உத்தமமான ஜனங்கள், அதே சமயத்தில் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர். 64. இயேசு உங்களோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை உங்களுடைய ஜீவியம் நிரூபிக்கிறது. நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, அவர் இங்கே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் இன்னமும் தம்முடைய பரலோகத்தில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை உங்களுடைய ஜீவியம் காண்பிக்கிறது. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்." நீங்கள் கிறிஸ்துவை உங்களுக்குள் வைத்திருக்கும்போது, அப்பொழுது உங்களில் உள்ள அதே ஆவி அவருடைய வார்த்தையை மறுதலிக்க, அதற்குப் பதிலாக ஒரு கோட்பாட்டை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அதனால் அதைச் செய்ய முடியாது. அவர் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிப்பதன் மூலம் தம்மையே தோற்கடிக்கப்படுவதாக இருக்கும். 65. யாரோ ஒருவர் அதற்கு தவறான வியாக்கியானத்தை அளித்தார் என்பதற்காகவா? நீங்கள் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்கள், மற்றவர்களைப் போலவே உங்களாலும் வாசிக்க முடியும். உத்தமமாய் இருங்கள். 66. தாவீது, "அவரை எப்பொழுதும் உங்களுக்கு முன்பாக வையுங்கள்" என்றான். நாம் இந்தப் புத்தாண்டை சந்திக்கும்போது, நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் அதை சந்திக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். "அவர் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறார். நான் அசைக்கப்படுவதில்லை" என்றான். 67. வார்த்தை எவ்வளவு பிழையற்றது என்பதைக் கவனியுங்கள். மரியாளும், யோசப்பும்...இப்பொழுது, என்னுடைய அருமையான கத்தோலிக்க நண்பர்களே, மரியாள் தேவனுடைய தாய் என்று கூறினீர்கள். மரியாள் இயேசுவின் தாயாகக் கூட இருக்கவில்லை, தேவனுடைய தாயாயிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். அவள் எப்படி இருக்க முடியும்? சரி. அவர் ஒரு முறை கூட அவளை தாய் என்று அழைத்ததில்லை; இல்லவே இல்லை. 68. அவர்கள் ஒரு முறை அவரிடத்தில் வந்து, "உன்னுடைய தாயாரும் சகோதரர்களும் வெளியே காத்திருக்கிறார்கள்" என்றனர். 69. அவர் தம்முடைய சபையோரை நோக்கிப் பார்த்து, "என்னுடைய தாய் யார்? என் சகோதரர் யார்?" என்று கேட்டார். அவருடைய சீஷர்களை நோக்கிப் பார்த்து, "என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் எவர்களோ, அவர்களே என் தாயுமாய், என்..." என்றார். 70. சிலுவையில், அவர் மரித்துக் கொண்டிருந்தபோது, அவர் அதேக் காரியத்தையும் கூட பேசினார். அவர் யோவானிடம், "இதோ இந்த மனிதன், மகனே, இதோ உன் தாய்!" என்றார். "தாயே, இதோ உன் மகன்" என்றல்ல. "ஸ்திரீயே, இதோ உன் மகன்!", பாருங்கள், அவள் தேவனுடைய தாயாக இருக்கவில்லை. 71. அவள் தேவன் உபயோகித்த ஒரு கடன் வாங்கப்பட்ட கருப்பை; தேவன் மற்றெந்த ஸ்திரீயையும் உபயோகிக்க ஒரு கருத்தை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் அதிகமாக இல்லை. அவர் (உங்களுடைய) உங்கள் இருதயத்தின் கர்ப்பப்பையை உபயோகித்து தம்முடைய குமாரனை பிரகடனம் செய்வார், நீங்கள்-நீங்கள் அவரை அதைச் செய்ய அனுமதித்தால். பார்த்தீர்களா? தேவனுடைய தாய் அல்ல. மரியாளின் வித்தாயிருந்தாலும் கூட, ஒரு உணர்வு இருந்திருக்க வேண்டும். அவர் மரியாளின் வித்தாக கூட இல்லை. 72. அது, முழு காரியமும், சிருஷ்டிகராகிய தேவனாயிருந்தது. முதலாம் ஆதாம் தகப்பனும் தாயுமில்லாமல் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால், இரண்டாம் ஆதாமும் அவ்வாறே இருந்தார். அதைக் காட்டிலும் குறைவான எந்தக் காரியமும் அவரை அவருக்கு இணையாக வைக்காது. அது உண்மை. அதே தேவன், அவர்தாமே வாசம் செய்யும் ஒரு சரீரத்தை சிருஷ்டித்தார். 73. இப்பொழுது மரியாள் தேவனுடைய தாயாயிருந்திருந்தால், அவள் எப்படி அங்கே நழுவிச் சென்றாள் என்று நாம் கண்டறிகிறோம். அவள், "உன் தகப்பனும் நானும் கண்ணீரோடே உம்மைத் தேடினோம்" என்றாள். கன்னிப் பிறப்பை மறுதலித்தல், "உன் தகப்பனாகிய யோசேப்பும் நானும் உம்மைத் தேடினோம்." 74. அந்த பன்னிரெண்டு வயதுப் பையனைக் கவனியுங்கள், பன்னிரெண்டு வயதுப் பிள்ளை, "அங்குள்ள ஸ்தாபனங்களோடு நான் விவாதித்து, என் பிதாவுக்கடுத்தவைகளைக் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார். இப்பொழுது, அவர் யோசேப்பின் வேலையைக் குறித்து, உடன் இருந்திருந்தால், அவர் தச்சன் கடையில் இருந்திருப்பார். யோசேப்பு அவருடைய தகப்பனாயிருக்கவில்லை. தேவன் அவருடைய பிதாவாயிருந்தார். "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியவில்லையா?" அங்கே பன்னிரெண்டு வயதில், அவர்களோடு கற்றறிந்த ஆசாரியர்கள் இருந்தனர். பள்ளியில் ஒரு நாள் கூட இருந்ததில்லை, ஆனால் அதே சமயத்தில் அவர்கள் அந்த ஞானத்தைக் குறித்து வியப்படைந்தனர். பாருங்கள்... 75. அவர் வார்த்தையாயிருந்தார். அவர் பிறந்தபோது, அவர் வார்த்தையாயிருந்தார். அவர் இன்னமும் வார்த்தையாயிருக்கிறார். கவனியுங்கள், வார்த்தை போலியானதை எடுக்காது. அவள், "உன் தகப்பனும் நானும் கண்ணீரோடே உம்மைத் தேடினோம்" என்றாள். 76. "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார். 77. தம்முடைய சொந்த தாயை கடிந்து கொண்டாரா? ஏன்? அவர் வார்த்தையாயிருந்தார். யாரோ ஒருவருடைய சிந்தையில் ஒரு கேள்வி இருக்கும், மரியாள் இங்கே இருந்தால், "பரிசுத்த ஆவியானவர்" தன் மேல் நிழலிட்டு ஒரு குமாரனை பிறப்பித்தார் என்று அவர் ஒரு காலத்தில் கூறினார், அதன்பின்னர் இங்கே யோசேப்பை பிதா என்று அழைக்கிறாள். வார்த்தை பிழையற்றது. அது தவறிப்போக முடியாது. 78. "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியீர்களா?" அவர் பிதாவுக்கடுத்தவைகளைக் குறித்ததாயிருந்தார்; யோசேப்பின் வேலை, கதவுகள் மற்றும் தச்சனின் வேலை அல்ல-அல்ல. அவர் தம்முடைய பிதாவுக்கடுத்தவைகளைக் குறித்ததாயிருந்தார், அந்த நாளில் அவர்கள் கொண்டிருந்த மதவாத அரசியலை சரிபடுத்தினார். "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா?" ஆம், ஐயா. 79. இன்றைக்கு அநேக ஜனங்கள் இந்த அருமையான சபைகளில் அநேகர் அந்த சபை ஆலோசனை சங்கத்திற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள்; "போய்" இல்லை, அவர்கள் ஏற்கனவே அங்கே இருக்கிறார்கள். அது சரியாக செய்ய வேண்டிய காரியம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள், "நட்பாக, அருமையாக, ஏன் நாம் யாவரும் ஒன்று சேர முடியாது?" ஏன், அவர்கள் யாவரும், அநேக ஆண்டுகளாக, எல்லா மெதோடிஸ்டுகளை பாப்டிஸ்டுகளாகவும், மற்றும் எல்லா பாப்டிஸ்டுகளை பிரஸ்பிடேரி யன்களாகவும் ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்; பெந்தேகோஸ்தேயினர் அவர்கள் எல்லோரையும் பெந்தே கோஸ்தேயினராக ஆக்க முயற்சித்துள்ளனர். உங்களால் அதைச் செய்ய முடியாது, ஆனால் ஒரு ஆலோசனை சங்கமே உங்களுக்கான பதிலாய் உள்ளது. அதற்கு பதில், அவர்கள் என்ன செய்வார்கள் என்று வேதம் கூறுகிறதோ, அதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். சிநேகித சபைகள், ஆம், ஐயா, "நல்லது, நாம் ஐக்கியம் கொள்வோம்!" என்ற ஒரு கூட்டிணைவாகும். 80. வேதம், "இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய எப்படி ஒருமித்து நடக்க முடியும்?" என்று கூறியுள்ளது. 81. அவர்களில் சிலர் கன்னிப் பிறப்பை மறுக்கின்றனர். எண்பது சதவிகித புராட்டஸ்டென்ட் சபைகள் கன்னிப் பிறப்பை மறுக்கின்றன. அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை மறுக்கின்றனர். அவர்கள் அவருடைய வருகையின் அடையாளங்களை, உயிர்த்தெழுதலின் வல்லமையை மறுதலிக்கின்றனர். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அவர்கள் மறுதலிக்கின்றனர். ஒரு ஸ்திரீ ஒரு நாள் அவருடைய வார்த்தையின் ஒரு சிறு கட்டத்தை சந்தேகித்த காரணத்தால், தேவன் இந்த எல்லா குழப்பத்தையும் உலகத்தில் அனுமதித்திருக்கும் போது, உங்களால் எப்படி சந்தேகிக்க முடியும்? சாத்தான் அவளிடம் சத்தியத்தைக் கூறினான், ஒரு காரியத்தைத் தவிர மற்றெல்லாவற்றையும் கூறினான், ஆனால் அதுவே எல்லா தொல்லையையும் உண்டாக காரியமாயிருந்தது. இப்பொழுது, இந்த எல்லா மனவேதனையையும், துக்கத்தையும் நீங்கள் நோக்கிப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அதன் ஒரு சிறு கட்டம் சந்தேகமாயிருந்தது, ஒரு சிறு கட்ட சந்தேகம் நம்மை உள்ளே கொண்டு செல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 82. அந்தக் காரணத்தினால்தான் இயேசு ஒரு தூய்மையான, கற்புள்ள கன்னிகைக்காக வருகிறார், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உலகத்தினால் அல்ல, ஆனால் தேவனுடைய வல்லமையினால் நிரப்பப்பட்டவள். ஓ, இந்தக் குழுவிற்குள் பிரவேசிக்க ஒரு சாத்தியம் உண்டு என்பதை அறிவது எவ்வளவு அற்புதமானது! நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள்? ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் அதை ஒருபோதும் செய்யமாட்டீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படும்போது, மறைமுகமான இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாகி, மரணத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலையாகி அவரோடு உயிர்த்தெழுந்து நீங்கள் அதைச் செய்வீர்கள். அதுதான் ஒரே வழி. 83. இருள்! பெரிய ஸ்தாபனங்கள், ஒரு மகத்தான மனிதர் குழு ஒன்று கூடி, அதைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை அமைத்து, அது தொடக்கத்தில் இருந்ததைப் போன்றே உங்களை மீண்டும் ஒரு திருப்பத்திற்குள்ளாகத் தள்ளுகிறது. அந்த விஷயத்தில் நம்பிக்கையே இல்லை; நீங்கள் வெறுமனே போய்விட்டீர்கள். இந்த நட்பு சபைகளைப் பற்றி அவர்கள் அனைவரும் மிகவும் கிளர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது, தேவன் அவர்களோடு இருப்பாரா என்று சிந்தித்துப் பாருங்கள். "பாருங்கள், ஆலோசனை சங்கம் யாவரும் அங்கு கூடி, ஆயிர வருட அரசாட்சி துவங்கப் போகிறது, மற்ற எல்லா கிறிஸ்தவ சபை அசைவுகளையும், மற்ற காரியங்களையும் செய்கிறார்கள்," அவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கி, ஒரு வல்லமையினால், அவர்களோடு சேர்ந்து கொள்ளாத ஸ்தாபனங்கள் மற்றும் இன்ன பிற ஸ்தாபனங்கள் மூடப்படும் என்கின்றனர். அது நடக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். 84. நான் அதை இங்கே எழுதி வைத்துள்ளேன், அதே நாளில் நாம்... கர்த்தர் 1933-ல் அதைக் காணும்படி செய்தார். இங்கே அது சரியாக அந்தவிதமாகவே உள்ளது...அது கூறப்பட்டுள்ள விதமாகவே, அதே வழியில் வருவது, போப்பாண்டவர் எப்படி ரோமை விட்டுச் செல்வார், மற்றும் பல. 85. இப்பொழுது, அவர்கள் நல்ல ஜனங்கள், ஆனால் தவறாக உள்ளனர். யோசேப்பும் மரியாளும் அருமையான ஜனங்களாய் இருந்தனர், ஆனால் உண்மையாகவே தவறாக நினைத்திருந்தார்கள். ஆனால் அது என்னவாயிருந்தது? அந்த வார்த்தை தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை காண்பிக்க தேவன் ஒரு பன்னிரெண்டு வயது பையனை உபயோகித்தார், அது சரியாக என்னவாயிருந்ததோ, அது முதலாவதாக, "அவர் கன்னிப் பிறப்பில் பிறந்தார்" என்று கூறியுள்ளது, அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார். 86. அவர்கள் சபைகளில் சேர்ந்துகொண்டபோது, அவர் அவர்களோடு இருந்தார் என்று எண்ணிக்கொண்டனர், ஆனால் அது அவ்வாறு இல்லை. இப்பொழுது, ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு...இப்பொழுது, அது அந்தகாரம், என்னால் இன்னும் ஒரு மணி நேரம் அதன்பேரில் தரித்திருக்க முடியும். 87. ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட, விலையேறப்பெற்ற, அழைக்கப் பட்ட, தேவனுடைய பரிசுத்தவான்களுக்கு, வருகின்ற இந்த ஆண்டில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஷாலோம், தேவனுடைய சமாதானம்! 88. நேரம் வந்துவிட்டது! உலகம் சிருஷ்டிக்கப்பட்ட நாட்களுக்கு முன்னரே நான் அங்கே இருந்திருந்தால், கீழே நோக்கிப் பார்த்து முழு காரியத்தையும் கண்டிருந்து, பிதாவானவர் என்னிடத்தில், "நீ எந்த நாளில் ஜீவிக்க விரும்புகிறாய்?" என்று கேட்டிருந்தால், நான் இப்பொழுதே என்று கூறியிருப்பேன்! இதுவே அந்த வேளையாயிற்றே! மணவாளனின் வருகைக்கு சற்று முன்னர், இதுவே சபையானது வந்துள்ளதிலேயே மகத்தான நேரமாய் உள்ளது. ஓ, ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையானது அக்கினிமயமானதாயிருக்க வேண்டும், அவர்கள் மத்தியில் சுவிசேஷ வெளிச்சம் ரூபகாரப்படுத்தப்பட்டு, எரிந்து கொண்டிருக்கிறது. "எழும்பி பிரகாசி, ஏனென்றால் ஒளி உங்களிடத்திற்கு வந்துள்ளது," இந்த நாளின் வெளிச்சம். ஏசாயா அவனுடைய நாளின் ஒளியாயிருந்தான். நோவா அவனுடைய நாளின் ஒளியாயிருந்தான். ஏன்? அவர் வார்த்தையை வெளிப்படுத்தியிருந்தார். சுவிசேஷம், இந்த நாளுக்கான வேதாகம வார்த்தைகள், இந்நாளின் வெளிச்சம். நாம் ஜீவித்துக் கொண்டிருப்பது என்னே ஒரு மகிமையான நேரம்! 89. இப்பொழுது, "காலை வணக்கம்" என்பது சமாதானத்தைக் குறிக்கிறது. இருள் கூடிக் கொண்டிருக்கிறது. அது எதற்காக கூடுகிறது? வெளிச்சத்தைக் காண்பிக்க வேண்டும். ஏசாயா 60:1-ல், "எழும்பி, பிரகாசி, ஒளி உங்களிடத்திற்கு வந்திருக்கிறது." அந்தக் காரணத்தினால்தான் என்னால், "ஷாலோம்" என்று கூற முடிகிறது. ஒளி உங்களிடத்திற்கு வந்துள்ளது, தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்திரீக்கு, தெரிந்து கொள்ளப்பட்ட அம்மாளுக்கு தேவனுடைய சமாதானம்; தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னே, அவர்களை அழைத்து, அதற்காக நியமித்தார். 90. மற்றவர்கள் அதை ஒருபோதும் காணமாட்டார்கள். அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறியமாட்டார்கள். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. இயேசு, "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் வரும்" என்றார். அது... 91. அங்கே யூதாஸ் நின்று கொண்டிருந்தான், வெளிச்சம் இங்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது, ஆனால் அவனுடைய இருதயத்தில் கருமையான விதை இருந்தது. பலப்பரீட்சை வந்தபோது, இருள் வெளிப்பட்டது. 92. இங்கே ஒரு எளிய, வயோதிக ஸ்திரீ இருந்தாள், இங்கே முன்னால் முற்றிலும் இருளடைந்து, இருந்தாள், ஆனால் இங்கே கீழே ஒரு முன்குறிக்கப்பட்ட வித்து இருந்தது. வெளிச்சம் வந்தபோது, அது இருளை சிதறடித்து, அது வெளிப்பட்டது. "மேசியா வரப்போகிறார் என்பதை நாங்கள் அறிவோம், அவர் வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குக் காண்பிப்பார்." இயேசு, "நானே அவர்" என்றார். 93. ஆனால் யூதாஸ் அதை சந்தேகித்து, அதே சமயத்தில் ஒளியில் நடந்து கொண்டிருக்க வேண்டியவனாயிருந்தான். பாருங்கள், இங்கே வெளிச்சம் ஏற்றுவது முக்கியமில்லை; இங்கே கீழே விழும் வெளிச்சம்தான் கணக்கிடப்படுகிறது. இங்குள்ள ஒளியானது நடந்து, ஐக்கியங்கொள்ளுதல், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்; ஆனால் உண்மையான தேவனுடைய வல்லமை உள்ளே வரும்போது, அது இந்த மரித்த வித்திற்கு திரும்ப வர முடியாது, அது ஒரு ஸ்தாபனத்தில் பிரதிபலிக்கும். 94. ஆனால் அது இங்கே பின்னால், ஒரு அசலான, முன்குறிக்கப்பட்ட வித்து, அந்த வெளிச்சம் இங்கே இறங்கி வந்து, எல்லா இருளையும் உங்களிடத்திலிருந்து அகற்றி, உங்களை கிறிஸ்துவோடு ஐக்கியத்தில் வைக்கிறது. அவரே உலகத் தோற்றத்திற்கு முன்னரே உங்களுக்கு ஜீவனை அளித்தவராயிருந்தார், இல்லையென்றால் தேவன் என்ன கூறினாரோ அதை நீங்கள் ஒருபோதும் காணமாட்டீர்கள். 95. இப்பொழுது, முன்குறிக்கப்பட்ட வித்தாகிய உங்களுக்கு, ஷாலோம்! ஆமென். தேவனுடைய சமாதானம் உங்கள் மீது தங்கியிருக்கும், ஏனென்றால் நாம் இப்பொழுது முடிவுக்கு அருகில் இருக்கிறோம். நாம் முடிவிற்கு அருகில் இருக்கிறோம். நாம் அந்த குழுவைக் குறித்து சிறிது நேரம் பேசப் போகிறோம். ஷாலோம்! 96. தேவனுடைய வெளிச்சம் வந்துவிட்டது. இந்த நாளுக்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தின் வெளிப்படுத்துதல்களை நீங்கள் காணும்படியாக, வார்த்தை, வெளிச்சம் மீண்டும் ரூபகாரப் படுத்தப்படுகிறது. "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நினைக்கிறீர்கள்." நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த நாளைக் குறித்து அவைகள் சாட்சி பகருகின்றன. இந்நாளின் வெளிச்சம் என்ன? இந்த நாளுக்காக வேதம் என்ன வாக்குத்தத்தம் செய்துள்ளது? இது எந்த நேரம் என்று பாருங்கள்! 97. யோவானை விசுவாசிக்காததற்காக இயேசு அவர்களை கடிந்து கொண்டதில் வியப்பொன்றுமில்லை. அவன் ஒளியாயிருந்தான், ஏனென்றால் அவன் வருவான் என்று தீர்க்கதரிசி கூறினான். அங்கே அவன், வெளிப்படுத்தப்பட்ட ஒளியாய் இருந்தான். அவர்கள் அதைக் காணவில்லை. அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை; அவர்கள் அவனை மேசியா என்று எண்ணினர், அவர்கள் வேறு ஏதோ காரியத்தை நினைத்தனர், இது வேறொன்றாக இருந்தது. அவர்கள் அதைக் காணத் தவறினர். இயேசுவே வாரும். இரண்டு விளக்குகள் ஒரே நேரத்தில் பிரகாசிக்க முடியாது. 98. ஒரு சபை வெளிச்சமும் தேவனுடைய வெளிச்சமும் ஒரே நேரத்தில் பிரகாசிக்க முடியாது. அது சபை வெளிச்சத்தை அணைக்கும் தேவனுடைய வெளிச்சமாய் இருக்க வேண்டும். அதுதான் இன்றைக்கும் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த வேளையின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாகிய தம்முடைய ஒளியிலிருந்து தேவன் சபையை வேறுபடுத்திக் கொண்டிருக்கிறார். நண்பனே, அதுதான் சத்தியம். நீங்கள் அதை விசுவாசிக்க விரும்பாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் காத்திருந்து, அது அவ்வாறானதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறியலாம். காத்திருக்க வேண்டாம், உள்ளே பிரவேசிக்க ஒரு வாய்ப்பு இருக்கும்போது, நீங்கள் இப்பொழுதே உள்ளே செல்வது நல்லது. 99. அது ரூபகாரப்படுத்தப்படும்போது, வார்த்தை வெளிச்சமாக இருக்கிறது. இந்நாளுக்காக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை ரூபகாரப்படுத்தப்படும் வரை, அப்பொழுது அது வெளிச்சம் அல்ல. அது இருக்க முடியாது. தேவன், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறினபோது, சூரியனே வரவில்லையென்றால், அங்கே ஒளியின் அடையாளமே கிடையாது. ஆனால் தேவன், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறியபோது, வெளிச்சம் உண்டானது. தேவன் ஒரு மேசியாவை வாக்களித்தபோது, மேசியா வந்தார், அப்பொழுது அவருடைய வார்த்தை நிறைவேற்றப்பட்டது, அவர் அந்த வேளையின் ஒளியாயிருந்தார். அவர் நோவாவுக்கு வாக்குத்தத்தம் செய்தபோது, அவர் மற்றவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தபோது, அவர்கள் அந்த வேளையின் வெளிச்சமாயிருந்தனர். 100. இன்றைக்கு இந்த வேளைக்கான வெளிச்சம் உள்ளது, அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் உள்ளது, அவருடைய வார்த்தை இந்நாளுக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்; இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள், நான் பிதாவினிடத்திற்குப் போகிறேன்." அவர் செய்ததைக் காட்டிலும் மகத்தான கிரியைகள், பெரிய காரியங்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன். அது தாழ்மையாகத் தென்படுகிறது. அது ஜனங்களுடைய தலைக்கு மேல் செல்வது போன்று தென்படுகிறது. பாருங்கள், அவர் பூமியில் இருந்தபோது, உங்களால் எப்படி "பெரிய" கிரியைகளைச் செய்ய முடிந்தது? நான் அதை, அநேக முறை, "அதிகமாக" என்று மொழிபெயர்த்திருக்கிறேன், ஆனால் அதே காரியம் தான். "பெரிய, இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்" என்று அவர் பரிசுத்த யோவான் 14:12-ல் கூறினார். 101. நீங்கள் கவனித்தீர்களா? அவர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றச் சென்றபோது, அவர் முதலில், தண்ணீரை எடுத்தார்; ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்ட பொருளை, அதை திராட்சரசமாக மாற்றினார். அவர் ஐயாயிரம் பேரை போஷித்தபோது, அவர் ஒருமுறை தண்ணீரில் நீந்திய ஒரு மீனை எடுத்து, அதை பிட்டு, அதை கொடுத்தார், சிருஷ்டிப்பைப் பெருக்கினார். அவர் ஒரு காலத்தில் கோதுமையாக இருந்து, அப்பமாக சுடப்பட்டதை எடுத்து, அதை பிட்டு, அதை நீட்டி கொடுத்து...அதை ஜனங்களிடம் கொடுத்தப்பின், அது மீண்டும் திரும்பி வந்தது. சிருஷ்டிப்பை பெருக்கினார்! 102. ஆனால் கடைசி நாட்களில், சிருஷ்டிப்பின் எந்த அடையாளமும் இல்லாத நிலையில், எப்படியாயினும், அவர் அதைப் பேசி சிருஷ்டிக்கிறார், ஆதியில் இருந்த அதே தேவனாயிருப்பதைக் காண்பிக்கிறது. அவரால் அணில்களை சிருஷ்டிக்க முடியும், அவர் என்ன வேண்டுமானாலும் சிருஷ்டிக்க முடியும், ஏனென்றால் அவர் தேவனாயிருக்கிறார். "நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வீர்கள்." வார்த்தை பிழையற்றது, அது வெளிப்படுத்தப்பட வேண்டும், நிறைவேற்றப்பட வேண்டும். "நீங்கள் இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்," பெருக்கிக் கொள்ளாமல், பேசி சிருஷ்டித்தல். 103. அவர் வாக்குத்தத்தம் செய்தபோது, இப்பொழுது வார்த்தையில் கவனியுங்கள். அப்படியானால் நாம் எங்கே, எங்கே இருக்கிறோம்? நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நேரம் என்பது என்ன? எல்லா நேரத்திலும் உள்ளது போன்று, தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதல். நீங்கள் ஏழு சபைக் காலங்களைக் குறித்த செய்தியைப் பெற்றுள்ளீர்கள். அந்த ஜீவன்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு புறப்பட்டுச் சென்றன என்பதையும், அவைகளைப் பின்தொடர்ந்த ஜீவன்களையும் சரியாகக் கவனியுங்கள். அது சீர்திருத்தக்காரர்களின் காலத்தினூடாக வந்து சேருவதை, ஒவ்வொரு காலத்திலும், சரியாக வார்த்தை என்ன கூறுகிறதோ, அப்படியே அது இருக்க வேண்டியதாயிருந்தது. எனவே பரிசுத்த ஆவியானவர் வேதம் கூறின விதமாகவே இன்றைக்கும் வெளிப்படுத்துவார். 104. நாம் வானங்களிலும், பூமியிலும் நிழலிடுவதையும், ஆலோசனை சங்கங்களும் மற்ற காரியங்களும் ஆயத்தமாயிருக்கிறதையும் காண்கிறோம். 105. இவை எல்லாவற்றின் மத்தியிலும், இயேசு கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷம், இந்த நாளுக்காக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு, தம்மை வெளிப்படுத்துகிறதை, நாம் காண்கிறோம். நாம் ஒரு அற்புதமான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாளுக்கான வார்த்தையைக் கேட்கும்படியாக, உலகத்தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொள்ளப்பட்டு, வார்த்தையை உங்களுடைய இருதயத்தில் கொண்ட உங்களுக்கு, ஷாலோம். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், அது உங்களுக்கு வரப்போகும் ஒரு மோசமான ஆண்டாகும். நீங்கள் அவ்வாறு இருந்தால், உங்களுக்கு முன்னால் அது ஒரு மகத்தான உலகமாய், இல்லை மகத்தான நாளாய், இப்பொழுது வரப்போகும் மகத்தான ஆண்டு, புத்தாண்டாய் இருக்கும். 106. ஒரு புதிய பக்கம் திரும்புவதற்காக அல்ல; அநேக ஜனங்கள் புத்தாண்டில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்ப முயற்சிக்கிறார்கள், அடுத்த நாளே அதைத் திருப்பிவிடுகிறார்கள். 107. அன்றொரு நாள் காலையில் நான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறு கதையைப் போன்றிருந்தது. அதிகாலையில் எழுந்து வெளியே சென்று காலை செய்தித்தாளை வாங்க வந்த தனது கணவரிடம் ஒரு பெண் கூப்பிட்டாள். அவர் காலை செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் கூறினார்...அவள், "புதிய செய்தி ஏதாவது உள்ளதா?" என்று கேட்டாள். அதற்கு அவர், "இல்லை, ஒரே காரியம், வித்தியாசமான ஜனங்கள் மாத்திரமே" என்றார். 108. இன்றைக்கும் ஏறக்குறைய அந்தவிதமாகவே உள்ளது, அதேக் காரியம். நாம் ஒரு புதிய ஸ்தாபனத்தை, அதே பழைய உபதேசத்தைப் பெற்றுள்ளோம்; அதை அரவணைத்துக் கொண்டு, யாரோ ஒருவர் அதை இந்த பக்கமாகவோ அல்லது அந்த வழியாகவோ ஒரு சிறு கட்டமாக செல்லச் செய்கிறார்கள். 109. இது ஒரு புதிய நாள். அல்லேலூயா! இது நாம் இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் எழும்பி பிரகாசிக்க வேண்டிய நாளாகும். காரிள் பூமியின் மேல் படிகிறது; நமக்காக ஒரு புதிய நாள் இருக்க வேண்டும், ஆம், உண்மையாகவே, அவர் அதைச் செய்கிறவிதமாகவே அதைச் செய்ய வேண்டும். ஆனால் அவருடைய வார்த்தைக்குத் திரும்பி, இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறதை கண்டு, நீங்கள் பகல் வெளிச்சத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நாள்காட்டியை மாற்றுவது நேரத்தை மாற்றாது; அது நாட்காட்டியையே மாற்றுகிறது. 110. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தாவீது செய்தது போல, உங்களுடைய எதிர்காலத்தை அவருடைய கரத்தில் வையுங்கள். "எப்படி? சகோதரன் பிரான்ஹாம், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்?" உங்களுடைய எதிர்காலத்தை அவருடைய கரத்தில் வையுங்கள். என்ன வந்தாலும் அல்லது போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை; அவரை நம்புங்கள். அவர் வார்த்தையாயிருக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள். தாவீது, "அவருடைய காலம் என் கரத்தில் உள்ளது. எல்லா நேரத்திலும் அவரில் நம்பிக்கை வையுங்கள். எப்பொழுதும் அவரையே நம்பியிருங்கள்." தாவீது எதிர்காலத்தை வைத்திருந்தது யார் என்பதை அவன் அறிந்திருந்தான், அந்தக் காரணத்தினால்தான் அவனால் இதைக் கூற முடிந்தது. ஒருவர் மாத்திரமே எதிர்காலத்தை உடையவராயிருக்கிறார், அது தேவன். எனவே, அவர் எதிர்காலத்தை உடையவராயிருக்கிறார்-அவர் உங்களை பற்றிக்கொள்ளட்டும். சரி. 111. சில ஜனங்கள், "ஆனால், சகோதரன் பிரான்ஹாம், நான் முயற்சித்தேன், நான் முயற்சித்திருக்கிறேன்" என்று கூறுகின்றனர். 112. ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். பொறுமையே நற்பண்பு. பொறுமை என்பது பரிசுத்த ஆவியின் நற்பண்பு. "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புது பெலன் அடைவார்கள்." 113. நீங்களோ, "நான் எப்படி இனிமேல் காத்திருக்க முடியும்?" என்று கேட்கலாம். தொடர்ந்து காத்திருங்கள். நீங்கள் நிற்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு, நில்லுங்கள், பாருங்கள், அப்படியே நிற்கவும். "நான் அதை எப்படி செய்யப் போகிறேன்?" நில்லுங்கள்! அது சத்தியம் என்றும், அது சத்தியம் என்றும் அவர் கூறினார். அது சம்பவிக்கும் என்று அவர் கூறினார். "எப்படி?" எனக்குத் தெரியாது; ஆனால் அது சம்பவிக்கும். அவர் அவ்வாறு கூறினார். அவர் அதை வாக்குப்பண்ணினார். அவர் அதை வாக்குப்பண்ணியிருந்தால், அது நிறைவேறப் போகிறது. அவ்வளவுதான். அதை வீணாக்க முடியாது. 114. எனவே இப்பொழுது நினைவிருக்கட்டும், வரப்போகும் இரட்சகரைக் குறித்த தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற தேவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். தேவன் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற, நாலாயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். ஆனால் அது எப்பொழுது சம்பவிக்கப் போகிறது என்பதை, துவக்கத்திலிருந்தே, அவர் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தார்; வேறு யாரும் செய்யவில்லை. அது சம்பவிக்கும் என்று அவர் கூறினார். அது சம்பவித்தபோது, ஜனங்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று அறியாத அளவிற்கு, அப்பேர்ப்பட்ட ஒரு தவறான நம்பிக்கையில் இருந்தனர். அதே காரியம் மீண்டும் நிகழாமலிருந்தால்! அது எப்பொழுதுமே தவறிப்போவதில்லை, இருபுறமும், எப்பொழுதுமே தவறுவதில்லை. 115 இந்த ஆண்டுகளில் அவர் என்ன செய்தார்? அவருடைய வருகையின் மாதிரிகளை அவர் காண்பித்தார். 116. அவர் அதை யோசேப்பில் காண்பித்தார். நீங்கள் யோசேப்பின் வாழ்க்கையை நோக்கிப் பார்ப்பீர்களேயானால்; தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்படுகிறான், தன்னுடைய தகப்பனால் நேசிக்கப்படுகிறான். ஏன்? ஏனென்றால் அவன் ஆவிக்குரிய வனாயிருந்தான், ஏனென்றால் அவன் தரிசனங்களைக் கண்டான். மற்றவர்கள் தரிசனங்களைக் காணவில்லை. அவர்கள் கோத்திரப் பிதாக்களாயிருந்தனர் ஆனால் அவர்கள் தரிசனங்களைக் கண்டு, சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைக்கவில்லை. ஆனால் அவர்கள் அவனைக் குறித்து பொறாமை கொண்டனர். அவன் ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டான், கொல்லப்பட வேண்டிய பள்ளத்திலிருந்து எழுப்பப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் அமர்த்தப்பட்டிருந்தான். அவன் சிங்காசனத்தை விட்டுச் சென்றபோது, எக்காள சத்தம் தொனித்து, "தெண்டனிட்டுப் பணியுங்கள்; யோசேப்பு வருகிறார்!" என்றனர். 117. இயேசு சரியாக என்ன செய்தாரோ, அப்படியே தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் சிங்காசனத்தை விட்டுச் செல்லும்போது, எக்காளங்கள் முழங்கும். முழங்கால்கள் யாவும் முடங்கி, தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவண்டை அறிக்கை பண்ணும். சரியாக. 118. அவர் அதை தாவீதின் மாதிரிகளில் காட்டினார், அவர் மேலே இருந்தபோது.. புறக்கணிக்கப்பட்ட ஒரு ராஜா எருசலேமை நோக்கிப் பார்த்து அழுதுகொண்டிருக்கிறார். "கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.' 119. காலங்களினூடாக, அவர் அதை முன்னடையாளங்களில் காண்பித்தார், என்றோ ஒரு நாள் கடைசி மாதிரி நிறைவேறும் என்பதை அறிந்திருந்தும், அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் முழு வெளிப்படுத்துதலும் அங்கிருக்கும். முழு வாக்குத்தத்தம் வந்தபோது, அவர் அதை மாதிரியாக்கினாலும்... நாளுக்கு நாள், வருடா வருடம் அவர் அதை மாதிரியாக்கினார். அது உண்மை நிலைக்கு வந்தபோது, அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. 120. அவர் அதேக் காரியத்தைச் செய்திருக்கிறார், அதை மாதிரியாகக் காண்பித்து, சபைக் காலங்களிலும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திலும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த வேளையில், ஜனங்கள் காரிருளில் இருக்கின்றனர், அவர்களால் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை என்பது போன்று தென்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வருத்தமான காரியம்! 121. இங்கே உள்ள வாலிபன், அருமையான, பெரிய, நேர்த்தியான உருவமுள்ள ஒரு நபரை, தன்னுடைய தலைமுடியோடு, அவன் பெண்கள் செய்வது போன்று அதை சுருட்டிக்கொண்டு, அரை நிர்வாண ஆடைகளை அணிந்து, ஒரு பெரிய நீண்ட பின்னப்பட்ட கம்பளி சட்டையை கீழே தொங்கவிட்டு, ஊதா நிற காலணிகளை அணிந்திருந்தால் என்னவாகும். ஆண்மைத்தன்மை கொண்டதா? ஓ, என்னே, ஒரு மனிதனை அழைப்பது என்ன ஒரு பயங்கரமான காரியம்! ஒரு மனிதனை அழைப்பது என்ன ஒரு காரியம்! அது உண்மை. 122. ஏதோ ஒரு ஸ்திரீ, அழகாய், அழகாய் கருதப்பட்டு, ஒரு மனிதனுடைய கால்சட்டையுடன் வெளியே வந்து, அவளுடைய வாயில் ஒரு சிகரெட்டு, மற்றும் குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி. ஒரு பெண்ணை அழைப்பது என்னே ஒரு காரியம்! இயேசு மரியாளை "ஸ்திரீ" என்று அழைத்தார். அந்தவிதமாக கூட அழைக்கப்படக் கூடாது; வெறும் பெண்; 123. கவனியுங்கள், அந்த நேரம்! ஏன்? சில சமயங்களில் தாங்கள் உத்தமமானவர்கள் என்று உரிமை கோரும் ஜனங்கள், ஆனால் ஒரு காரிருளானது அவர்களை இதில் பிடித்துள்ளது. அவர்கள் அந்தவிதமாக இருப்பார்கள் என்று வேதம் கூறியுள்ளது. ஏசாயா 6-ம் அதிகாரத்தை வாசித்து, கடைசி நாட்களில் ஸ்திரீகள் அந்தவிதமாக செய்யக் கூடாதா என்று கண்டறியுங்கள், அவர்கள் என்னவாயிருப்பார்கள் என்று வேதம் கூறியுள்ளதோ, அவ்வாறே அவர்கள் இருப்பார்கள். அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தைக் குறித்து எரேமியாவும் மற்றும் பல்வேறுபட்டவர்களும் பேசினர், ஏனென்றால் அவர்கள் ஆதிமுதல் முடிவைக் கண்டனர். எனவே நாங்கள் இந்தக் காரியங்களையும், ஜனங்களின் மேல் காரிருளையும் காண்கிறோம். 124. ஆம், தேவனுக்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டது, எறியுங்கள்...மாதிரிகள் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் காட்டுகிறது, முடிவிலே அவர் வந்தபோது அவர்கள் அவரை அறியாதிருந்தனர், அவர் யோசேப்பு, தாவீது, எலியா, மற்றும் அங்கிருந்த யாவரிலும் சித்தரிக்கப்பட்டார். அவர் அவர்களோடு சித்தரிக்கப்பட்டார், ஆயினும் அவர்கள் ஏன் அதைக் காணவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கே சரியாக வேதத்தில், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில்" அவர் பிறப்பார் என்றிருந்தது. அவர் எப்படியாய் ஒரு கன்னிகையினிடத்தில் பிறக்க வேண்டியவராயிருந்தார் என்பதை நாம் வேத வாக்கியங்களில் கண்டறிகிறோம். "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பிள்ளையைப் பெறுவாள், அப்பொழுது அவர்கள் அவருக்கு ம்மானுவேல் என்று பேரிடுகிறார்கள்." 125. அவர்கள் ஏன் அவரைக் கொன்றனர்? "அவர் தன்னைதேவனாக்கிக் கொண்டபடியினால்," அவர் தேவனாயிருந்தார். நிச்சயமாக, அவர்கள் அதை ஒப்புக்கொள்கிறார்கள். "அவர் தேவனுடைய குமாரன் என்று கூறி, தம்மைத் தேவனாகவும், தேவனுக்குச் சமமானவர் என்று கூறினார்." ஏன், அவர் அவ்வாறே இருந்தார்! 126. அவர், "ஆலோசனைக்கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, அதிசயமானவர்!" என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேதம் கூறியுள்ளது. அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார். அவர்கள் ஏன் அதை புரிந்து கொள்ளவில்லை? அவர், "நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என்று கூறியதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள், "நாங்கள் மோசேயின் சீஷர்கள்" என்றனர். 127. "நீங்கள் மோசேயின் சீஷர்களாயிருந்தால், நீங்கள் என்னை அறிந்திருப்பீர்கள். மோசே என்னைக் குறித்து எழுதினான்" என்றார்கள். அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. 128. அழகான இயேசுவுக்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய கோட்பாடுகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் செல்லும்போது, வேளையானது மீண்டும் ஜனங்கள் மீது வந்துவிட்டது. அது உண்மை. இந்த மகத்தான பெரிய காரியங்கள் வந்து கொண்டிருக்கின்றன, அவைகளை இன்னும் அதிகமான இருளுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. தேவன் அதை தம்முடைய வார்த்தையில், வானங்களில் அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும், நிகழும் காரியங்களை சரியாக அந்த மணி நேரத்திற்கும் நிமிடத்திற்கும், என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ந்து அதேவிதமாகவே நடக்கின்றனர். அவர்களால் அதற்கு உதவி செய்ய முடியாது என்பது போன்று காணப்படுகிறது. நல்ல ஜனங்கள், ஆம், ஐயா, அவர்கள் அப்பொழுது செய்த அதேக் காரியத்தை இப்பொழுதும் செய்கிறார்கள். 129. நாம் காலத்தின் சிருஷ்டிகளாயிருக்கிறோம். தேவன் நித்தியத்தின் சிருஷ்டிகளாயிருக்கிறார்...தேவன் நித்திய சிருஷ்டியாயிருக்கிறார். அவர் ஒருபோதும் துவங்கவேயில்லை, அவர் ஒருபோதும் முடிவதில்லை. ஆகையால் ஏன் உங்களை அவருக்கு அர்ப்பணிக்கக்கூடாது? இன்றைக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாகிய வெளிச்சத்தின் சந்தோஷத்தினால் மேலே நோக்கிப் பிரகாசியுங்கள். நண்பர்களே, ஏன் ஜனங்களால் அதைக் காண முடியவில்லை? 130. கவனியுங்கள், நான் உங்களுடைய சகோதரன். நான் உங்களை நேசிக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்வது எனக்கு எளிதாக இருக்காதா, எப்போது, நான் தொடர்ந்து சென்று, "ஓ, பாருங்கள், நான் இதன் பேரில் ஒப்புரவாகுவேன், நான் ஒப்புரவாகுவேன்..." என்று கூற முடியுமா? நான் அதிலிருந்து வெளியே உருவாக்கப்படவில்லை. இல்லை ஐயா. அது வார்த்தையாயிருக்கும்போது, அது வார்த்தையாயிருக்கிறது. உண்மையான காரியத்திற்காக நிற்க தேவன் நமக்கு உதவி செய்வாராக! ஆம், ஐயா. அது அருமையாயிருக்கும், நிச்சயமாக, நீங்கள் முதுகில் அதிகமாக தட்டிக் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் அந்த எலும்பான விரல்கள் அந்த நாளில், நான் நின்றிருக்க என் முகத்தை சுட்டிக்காட்டி, "உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் நீர் எங்களுக்கு அதைக் கூறத் தவறிவிட்டீர்" என்று கூறும்போது நான் என்ன செய்வேன்? வ்யூ! இல்லை! 131. நான் பவுலைப் போல் இருப்பேன், "தேவனுடைய ஆலோசனை முழுவதையும் உங்களுக்கு மறைத்து வைக்காமல் உங்களுக்கு அறிவித்தேன்." எந்த மனிதனுடைய இரத்தப் பழியும் என் மேல் இல்லை. அது இருக்கும் இடத்திற்கு அது செல்லட்டும். அது சத்தியமாயிருக்கிறது. தேவன் அதை அறிந்திருக்கிறார், அவர் அதை ஆதரித்து, அது சத்தியம் என்று கூறுகிறார். 132. எதற்கு, சகோதரன் பிரான்ஹாமிடம் திரும்பவா? நீங்கள், நீங்கள், அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வது முட்டாள்தனமாக இருக்கும். கிறிஸ்துவண்டை திரும்புங்கள், அவர் வார்த்தையாயிருக்கிறார்! கிறிஸ்துவண்டை திரும்புங்கள்! 133. பிரமாணங்களிலிருந்து விலகிச் செல்லுங்கள்! - திரும்பிச் செல்லுங்கள்...நீங்கள் உங்களுடைய கோட்பாட்டை ஆரம்பித்தாலும், எனக்குக் கவலையில்லை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது நீங்கள்...அது தேவனுக்கு ஒரு காரியத்தையும் பொருட் படுத்துகிறதில்லை. சதுசேயர்களும், பரிசேயர்களும் உங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி, ஆக்கினைக்குட் படுத்தப்பட்டனர். 134. ஓ, நீங்கள் பரிசுத்த ஆவியைக் குறித்த உங்களுடைய அத்தாட்சியை வெவ்வேறு செயல்களின் மேல் வைக்க முயற்சிக்கிறீர்கள். நான் பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதல்களை விசுவாசிக்கிறேன். அது என்ன செய்கிறது? பெந்தேகோஸ்தேயினர், "அந்நிய பாஷைகளில் பேசுவதே பரிசுத்த ஆவியின் ஆரம்ப அத்தாட்சி" என்று கூறுகின்றனர். சூனியக்காரிகளும், மந்திரவாதிகளும் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, ஒரு மானிட மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்ததையும், தீர்க்கதரிசனம் உரைத்து, தேவன் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லையென்று மறுதலிக்கிறதையும் நான் கண்டிருக்கிறேன். நான் மந்திரவாதிகளின் முகாம்களில் இருந்திருக்கிறேன், அங்கே அவர்கள் மேஜையின் மேல் ஒரு பென்சிலை வைத்து, அதை மேலும் கீழும் குதிக்கச் செய்கிறார்கள், அந்நிய பாஷைகளில் எழுதி அதற்கு அர்த்தம் உரைக்கிறார்கள். அது உண்மை. அதற்கு ஒரு காரியமும் கிடையாது...ஆயினும், தேவன் தம்முடைய ஜனங்கள் மூலமாக அந்நிய பாஷைகளில் பேசுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் அதன் பேரில் அதிக அழுத்தம் கொடுத்து, "ஏன் அர்த்தம் உரைப்பவர் இருக்க வேண்டும்? அது ஏன் சபைக்கு ஒரு செய்தியாக இருக்க வேண்டும்?" என்று கேட்கிறீர்கள். 135. அப்படியானால் மற்ற ஜனங்களாகிய நீங்கள், நீங்கள், "ஆவியின் கனிகளை, அந்த விதமாகவே நாம் அறிவோம். அன்பு, சந்தோஷம், அந்தவிதமாகத்தான் நாம் அத்தாட்சியைப் பெற்றுள்ளோம்" என்று கூறுகிறீர்கள். அப்படியா? அப்படியானால் கிறிஸ்தவ விஞ்ஞானம் உங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டது. பெந்தேகோஸ்தேக்கள், மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் ஒருமித்துச் சேர்த்துக் கொள்வதைக் காட்டிலும் அவர்கள் அதை அதிகமாக உபயோகிக்கின்றனர். 136. என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். நான் உங்களுக்கு ஆவியின் கனிகளைக் காண்பிக்கட்டும், நீங்கள் அதற்கு இனிமேல் செல்ல முடியுமா என்று பார்க்கட்டும். நாம் இயேசுவை எடுத்துக் கொள்வோம். நான் கூறப்போகும் இந்த வார்த்தைகளுக்காக தேவனே என்னை மன்னியும்; நான் ஒரு நிமிடம் அவருக்கு எதிராக திரும்பப் போகிறேன், உங்களுக்குக் காட்ட, இங்குள்ள இந்த மனித ஆலோசனை சங்கத்தையும், இந்த பிற்பகல் இங்கே இந்த மனித ஆலோசனை சங்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் கூறுவேன்... 137. ஐயன்மீர், நாசரேயனாகிய இயேசு என்னும் நாமத்தைக் கொண்ட, ஒரு வாலிப நபர் இங்கே இருக்கிறார், அவருடன் எந்த சம்மந்தமும் வைத்திருக்காதீர்கள்! யார் முதலில்...நம்முடைய வேதம் நமக்கு என்ன போதிக்கிறது? தேவன் அன்பாயிருக்கிறார். நீங்கள் பிறந்தபோது முதலில் உங்களோடு இருந்தவர் யார்? உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியன். அது உண்மை. உங்களுக்கு தேவையிருந்தபோது, உங்களிடம் பணமில்லாதிருந்தபோது, உங்களிடத்தில் வந்து, உங்களுக்கு கொஞ்சம் கடன் கொடுத்தது யார்? உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியன். சரியாக. நீங்கள் பிரியப்போவதாயிருந்தபோது, உங்களுடைய தோளின் மீதும், தாயின் தோளின் மீதும் கையை வைத்து, ஜெபித்து உங்களை தேவனண்டை திருப்பினது யார்? உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியன். நீங்களும் உங்களுடைய அண்டை வீட்டாரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, உங்களோடு சேர்ந்து நின்று, உங்களை ஐக்கியத்தில் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்தது யார்? உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியன். அது உண்மை. நீங்கள் அப்பால் கடந்து செல்லும் அந்த நாளிலே உங்களுக்கு அந்த கடைசி வார்த்தைகளை கூறப்போவது, யார்? அது யார்? அவர்கள் உங்களை அங்கேயே கிடத்தி அழுக விடுகிறார்கள்; ஆனால் உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியன் வந்து உங்களை ஆசீர்வதித்து, தேவனுடைய வார்த்தையை உங்களோடு அனுப்புகிறார். உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியரே! 138. "நாசரேயனாகிய இயேசு என்று அழைக்கப்பட்ட இந்த நபரைக் குறித்தென்ன, அப்படியானால், பாருங்கள், அவர் எந்தப் பள்ளியிலிருந்து வந்தார்? உங்களுடைய அன்பான, வயோதிக ஆசாரியன் தன்னுடைய முழு வாழ்க்கையையும் தியாகம் செய்ய வேண்டியதாயிருந்தது. அவருடைய பாட்டனார் ஒரு ஆசாரியன். அவருடைய கொள்ளுப் பூதத்தா ஒரு ஆசாரியன். அவர் தன்னுடைய முழு நேரத்தையும் ஸ்தாபனத்தில் வைத்திருந்தார். அவர் வார்த்தைக்கு பயிற்றுவிக்கப்படுகிறார்; அவர் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார்." 139. இப்பொழுது நாம் ஆவியின் கனிகளைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். தயவு, அன்பு, சந்தோஷம், சமாதானம், புரிந்துகொள்ளுதல், நீடிய பொறுமை, பாருங்கள், ஆவியின் கனி. 140. "இந்த இயேசுவைக் குறித்து என்ன, அவர் எங்கிருந்து வந்தார்? அவர் எந்த பள்ளியிலிருந்தும் வெளியே வந்ததாக ஒரு வார்த்தை கூட நம்மிடம் இல்லை. அவர் செய்கிற எல்லாமே நாம் கட்டியுள்ள பள்ளிகளை கிழித்தெறிய முயல்வதேயாகும்." அங்கே அதிக ஆவியின் கனி இல்லை, அப்படித்தானே? 141. "அவர் அங்கே ஏழை வணிகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் என்ன செய்தார்...அவர்கள், அவர்கள் ஆடுகளை வளர்ப்பதில்லை, எனவே மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வரும்படியாக அவர்கள்-அவர்கள் அங்கே ஒரு சிறு தொழுவத்தை வைத்துள்ளனர். அந்த ஏழ்மையான வர்த்தகர், அவர்-அவர் ஒரு ஆட்டைக் காணிக்கையாக அளிக்க விரும்புகிறார், ஏனெனில் அது தேவனுடைய தேவையாயுள்ளது. அவன் தன்னுடைய ஆத்துமாவிற்காக பலி செலுத்தும்படியாக, அந்த வியாபாரிக்கு விற்கும்படியாக, அவன் செம்மறியாட்டை உள்ளே கொண்டு வருகிறான். இந்த நாசரேயனாகிய இயேசு என்ன செய்திருக்கிறார்? தன்னுடைய மேசைகளை உதைத்து எறிந்தார்; சிறிது தோலை எடுத்து, அதைப் பின்னி, ஆசாரியர்களை அங்கிருந்து அடித்து விரட்டினார்; உங்களுடைய தயவான, வயோதிக ஆசாரியனை, 'புல்லில் உள்ள ஒரு பாம்பு; ஒரு மாய்மாலக்காரன்!" என்று அழைத்தார். 142. இப்பொழுது நீங்கள் அதை ஆவியின் கனி என்று அழைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் உங்களுடைய ஆவியின் கனியானது எங்கே இறங்குகிறது? நீங்கள் இரக்கங்களைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில், அவர் அங்குள்ள திரளான ஜனங்களினூடாக சென்று, திரளான ஜனங்கள் படுத்துக்கிடந்தவர்கள், குருடர்கள், முடமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சூம்பினவர்கள், சப்பாணிகள், நொண்டிகள், இவர்களில் ஒருவரையும் சொஸ்தமாக்காமல்; இரக்கத்தினால் நிறைந்தவர். மாம்ச சிந்தை கொண்ட ஜனங்கள் ஒருபோதும் அதை அறியமாட்டார்கள். வேதபாட கருத்தரங்குகள் அதைப் போதிக்கிறதில்லை. அது ஒரு வெளிப்பாடு. நிச்சயமாக. ஆவியின் கனி அங்கே விழுகிறது, இல்லையா? அந்த ஆசாரியர்கள் பத்து மடங்கு ஆவியின் கனியை உடையவர்களாயிருந்தனர். 143. எது சரியென்று நீங்கள் எப்படி அறிந்துகொள்வீர்கள்? தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதன் வெளிப்படுத்துதல், இந்த வேளையின் வெளிச்சம். நிச்சயமாக. தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அதை விசுவாசிப்பதே பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது. அவர் வெளிப்படுத்தப்பட்ட, வார்த்தையாயிருந்தார். அவர்களில் சிலர் அதை மறுதலித்து, அதைக் குறித்து நகைத்து, அவரை ஒரு-ஒரு குறிசொல்பவர் என்றும், ஏதோ ஒரு பொல்லாத ஆவி என்றும் அழைத்தனர்; அந்நிய பாஷைகளில் பேசுவதற்கு அத்தாட்சி உண்டு, கனிகளின் அத்தாட்சி உண்டு. எழுதப்பட்ட வார்த்தையை மனிதன் விசுவாசிப்பது மாத்திரமே அத்தாட்சியாகும். அது ரூபகாரப் படுத்தப்படும்போது, அதன் வெளிச்சத்தில் நடந்து செல்லுங்கள். இயேசு இந்த வேளைக்கான வெளிச்சமாயிருந்தார், ஏனென்றால் அவர் இந்த வேளைக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்தார், அவர்களுக்கு அவ்வண்ணமாக கூற முயன்றனர், ஆனால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு-மிகவும் அதிகமாக இருளில் இருந்தார்கள். அது இன்றைக்கும், இப்பொழுதும் அவ்வாறே உள்ளது. 144. இப்பொழுது நாம், காலத்தின் சிருஷ்டிகளாயிருக்கிறோம். உங்களுடைய வழிகளை அவரிடத்தில் ஒப்புவியுங்கள், அவர் எதிர்காலத்தை சரியாக கொண்டு வருவார், ஏனென்றால் அவர் வார்த்தையில் இருக்கிறபடியால் நாம் அவரைக் காண்கிறோம். 145. இன்றைக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை அவர் ரூபகாரப்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை சந்திரனில் உள்ள அடையாளங்களில் காண்கிறீர்கள். நீங்கள் அதை சபைகளில் காணலாம். நினைவிருக்கட்டும். 146. "நீங்கள் 'சபையில்,' என்று கூறினீர்கள், அதற்கும் சபைக்கும் என்ன சம்மந்தம்?" 147. அப்படியே ஒரு நிமிடம். சந்திரன் சபையைக் குறிக்கிறது. எருசலேம் உலகிலேயே மிகவும் பழமையான சபை நகரமாக அறியப்படுகிறது. மெல்கிசேதேக்கு அந்த பட்டிணத்திலிருந்து வந்தவர்; சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா, எருசலேமின் ராஜா. அது உண்மை, உலகத்திலேயே மிகவும் பழமையான நகரம். அது ஒரு சந்திரனாய் இருந்தது, அங்கே நியாயப்பிரமாணம் நிறுவப்பட்டது போல, இதோ இந்த புறஜாதி இருளின் அலை அதன் மேல் வந்து கொண்டிருந்தது. அவர், "புறஜாதி யுகம் முடியுமளவும் சபையானது எருசலேமின் மதில்களை மிதிக்கும்" என்றார். இதோ அவள் இருக்கிறாள். நாம் அதற்குள் சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாம் என்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவள் திரும்பிச் செல்லப் போகிறாள். ஆம், ஐயா, நம்மால் அதைக் காண முடிகிறது. அவள் நிழலிடப்பட்டிருக்கிறாள், முன் நிழலிடப்பட்டிருக்கிறாள், முன்னறிவிக் கப்படுகிறாள்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வெளியே அழைக்கிறது. அவர்கள் தொடர்ந்து செல்லுகையில், மற்றவர்களோ இருளில் தடுமாறுகின்றனர். சரி. 148. இப்பொழுது அவருடைய வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம். நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகையால் அவர் இன்றைய வார்த்தையை ரூபகாரப்படுத்தியிருப்பாரானால், அது என்னவாயிருக்கிறது, வருடம் என்ன கொண்டு வருகிறது என்பதைக் குறித்து எனக்கு என்ன கவலை? அடுத்த வருடம் நான் எதைக் குறித்து கவலைப்பட வேண்டும்? நான் இன்றைக்கு ஜீவித்தாலும் அல்லது இன்றைக்கு மரித்தாலும் எனக்கு என்ன கவலை? அவர் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொன்றும் ரூபகாரப்படுத்தப்படும்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாக்குத்தத்தம் செய்த பிறகு, இன்றைக்கு அவரால் அதைச் செய்ய முடிந்தால்; அது ஒரு லட்சம் ஆண்டுகள், கழித்திருந்தாலும், இன்று, இயேசு காணக்கூடிய சரீரத்தில் பூமிக்கு திரும்பி வருவார், ஒரு சபைக்காகவும், ஒரு-ஒரு மீட்கப்பட்ட மணவாட்டிக்காகவும், அவளை இங்கிருந்து கொண்டு செல்லவே. என்ன வந்தாலும், போனாலும், நாகரீகங்கள் என்னவாயிருந்தாலும், "தொடருங்கள்" என்று கூறி, ஜனங்கள் முழு இருளில் அலைந்து திரிந்து, அவர்கள் விசுவாசிக்க விரும்பும் எதையும் விசுவாசிக்க முடியும், ஆனால் இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார். ஆகையால் நான் அவரிடத்தில் எதிர்காலத்தை நம்பியிருக்கிறேன். "தேவனாகிய கர்த்தாவே, நாளை என்ன வைத்திருக்கிறது என்பதை நான் அறியேன், ஆனால் நீர் நாளையை வைத்திருக்கிறீர் என்பதை நான் அறிவேன்." 149. அவருடைய வார்த்தை ஒரு பெரிய இசைக்கருவியின் இசை போன்றுள்ளது. உங்களில் எத்தனை பேர் ஒரு இசைக் கருவி இசையை கேட்டிருக்கிறீர்கள்? சரி, எல்லோரும் கேட்டிருக்கிறார்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும், ஒரு நாடகத்தில் இசை இசைக்கப்படுவதே ஒரு இசைக்கருவி இசை என்று பொருள்படும். எனக்கு அது சரியானது என்று நான் நினைக்கிறேன், ஒரு இசைக்கருவி இசை. "பேதுருவும் ஓநாயும்" என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா, அவர்கள் எப்படிப் பழகி வந்தார்கள் என்பது பழைய கதை...நான் அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன், எப்படி அவர்கள் முரசை எடுத்து, அந்த சிறு மரங்கொத்திப் பறவையைப் போல் குத்திக் கொண்டு, பேதுரு வெளியே செல்லும்போது, ஓநாய் உறுமுகிற சத்தமும், கொம்புகளின் சத்தமும்; ஒரு இசைக்கருவியின் இசை. 150. இப்பொழுது, நீங்கள் ஒரு இசைக்கருவி இசையை புரிந்து கொள்ளவில்லையென்றால், நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை யென்றால், அது உங்களுக்கு ஒரு பெரிய அமளியாகவே இருக்கும். அது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவை யாவுமே அடையாளங்களினாலும், சாடை வகைகளாலும் செய்யப்படுகிறது, ஆனால் அது இந்த இசைக்கருவி இசையில் ஒரு நாடகமாக செயல்படுகிறது. இப்பொழுது, நாம் கவனித்தால், ஒரு இசைக்கருவி இசையை இசையமைப்பவர் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும் அதை அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள், அதனுடைய மாற்றங்களை அறிந்து, என்ன சம்பவிக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். 151. இசையமைப்பாளர் ஒவ்வொரு அசைவையும், முடிவு முதல் துவக்கம் வரை, துவக்கத்திலிருந்து முடிவு வரை அறிந்திருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? அதை எழுதினவர், அவர் இதை இயற்றுகிறார், அவர் ஒவ்வொரு சிறு சந்திப்புகளையும் அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு இணைப்பையும் அறிந்திருந்தால், அதை இயக்கும்படி, இயக்குநரும் அறிந்திருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அதில் உங்களுடைய கோட்பாட்டை எப்படி திரித்துக் கூறப் போகிறீர்கள்? அந்த குச்சியின் ஒரு சிறு தவறு, அந்த அடையாளம், ஒரு இணைப்பில் ஒரு சிறிய தவறான அடையாளம், முழு இசைக்குழுவையும் தவறிழைக்கச் செய்து, முழு இசைக்கருவி இசையையும் பாழாக்கிவிடும். இப்பொழுது அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். இசையமைப்பாளரும் இயக்குநரும் ஒரே ஆவியில் இருக்க வேண்டும். 152. ஆகையால் தான் ஊழியக்காரனும், தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய மகத்தான இசைக்கருவி இசையை அவர் காலம் முதற்கொண்டு இசைத்து வருகிறார்; வார்த்தையின் பேரில், ஊழியக்காரர், இங்கே நோக்கிப் பார்த்து, "இது இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; நீ அதை இந்தவிதமாக செய்ய வேண்டும்" என்றார். அதை தாள் இசை கூறுகிறவிதமாகவே அவர் செல்ல வேண்டும். அந்தவிதமாகவே சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும், அந்த விதமாகவே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வார்த்தை கூறுகிறது. உங்களுக்குத் தெரியும், நீங்கள் அங்கே ஒரு கோட்பாட்டை சேர்த்துவிடுவீர்களானால், நீங்கள் அந்த முழு காரியத்தையும் குழப்பிவிடுவீர்கள். அது நாடகத்தை சரியாக உருவாக்க செல்ல வேண்டும். 153. இசையமைப்பாளர் என்ன கூறினாரோ, இயக்குனர் அதை அப்படியே இசையமைக்க வேண்டும். இப்பொழுது கவனியுங்கள், அவை யாவும் அடையாளங்களினால் செய்யப்படுகின்றன, சரியான விதமான ஒரு சத்தத்தைக் கொடுக்க, அது சரியான விதமான அடையாளமாக இருக்க வேண்டும். 154. பவுல், "எக்காளம் விளங்காத சத்தமிட்டால், யார் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?" என்று கூறினான். 155. இப்பொழுது வேதாகமத்தை எழுதி, இசையமைத்த தேவனை நீங்கள் பாருங்கள், அது முழுவதுமாக இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாய் உள்ளது. அவர் காலத்தின் மாற்றங்களை அறிந்திருந்தார். அவைகளை இயக்கிக்கொண்டிருக்கிற அந்த மனிதன், காலத்தின் அடையாளம், சரியாக வேதாகம் அடையாளங்களோடு செல்ல வேண்டும். அல்லேலூயா! என்னே, என்னே, என்னே, என்னே, என்னே! 156. சகோதரனே, சகோதரியே, உலகத்தோடுள்ள காரியம் என்ன? நான் ஏன் பைத்தியக்காரனாயிருக்கிறேன்? எங்கோ ஏதோ தவறு உள்ளது. இசைக்கருவியின் இசை தாளுடன் இசைந்திருக்கவில்லையே! பிரசங்கிக்கப்பட வேண்டிய, வெளிப்படுத்தப்பட வேண்டிய வார்த்தையாக இருக்கும்போது, அவர்கள் சபைக் கோட்பாட்டையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர்களிடம் ஏதோ கோளாறு உள்ளது, அப்பொழுது முழு குழுவும் குழப்பமடைந்து, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவை அனைத்தும், "என்ன நடந்தது? இது என்ன செய்தது? என்ன, இது சம்பவிக்கிறதா? இது, அது எப்படி சம்பவித்தது?" வேடிக்கையானவை. இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிதறுதல், ஏனென்றால் அது ஒருபோதும் வார்த்தைக்கு இசைவாக வரவில்லை. அதுதான் நம்முடைய, நாம் அழைக்கிற, கடைசி நாள் எழுப்புதலோடுள்ள காரியம். அதுதான் நம்முடைய பெந்தேகோஸ்தே செய்தியோடு உள்ள காரியமாய் உள்ளது. நாம் வேதாகமத்தை விட்டுவிட்டோம், அவர்கள் அங்கே முன்பு செய்ததுபோலவே சென்று ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவள் தாளத்தை தப்ப விட்டாள். 157. தேவனே, இரக்கமாயிரும். நான் அதை ஆழமாக பதியச் செய்யக்கூடிய வார்த்தைகள் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும், அது அப்படியே இருந்ததால், நான் அதை விரித்து திறந்து ஊற்ற முடியும். 158. என் சகோதரனே, சகோதரியே, அது இசைவாக இருக்க வேண்டும் என்பதை உங்களால் காண முடியவில்லையா? இயக்குனர் வார்த்தையோடு இருக்க வேண்டும். அது ஒரு காரியத்தைக் கூறும்போது, வேறொன்றைக் கூறாதே; அது தவறான அடையாளத்தை அளிக்கும், அப்பொழுது அந்த முழு காரியமும் தாளம் தவறிப் போய்விடுகிறது. அது உண்மை. தேவனுடைய வார்த்தை ஒரு மகத்தான அனுதாபமாக, சரியாகக் கூறினால் ஒரு இசைக்கருவி இசையாக இருக்கிறது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அவர் துவக்கினது போன்றே, நீங்கள் இசையில் துவங்க வேண்டும். நீங்கள் அவரோடு துவங்க வேண்டும். கவனியுங்கள், அதனுடைய தாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 159. "நான் சபையில் சேர்ந்து கொண்டேன்" என்று கூறுகிறீர்கள். அது தாளம் அல்ல. "நான் அவ்வண்ணமே செய்தேன்." அது தாளம் அல்ல. "நான் பீடத்தண்டை சென்று, 'நான்-நான், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்'" என்று கூறினேன். சாத்தானும் அதேக் காரியத்தைச் செய்கிறான். அது தாளம் அல்ல. பாருங்கள், நீங்கள் தாளத்திலிருந்து வெளியேறுகிறீர்கள். என்ன நடந்தது? யாரோ ஒரு இயக்குனர் உங்களிடம், "கரங்களைக் குலுக்கி, உங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்யுங்கள்; எங்களுடைய சங்கத்தில், எங்களுடைய ஸ்தாபனத்தில் சேர்ந்துகொள்ளுங்கள்" என்று சொல்லியிருக்கலாம். நீங்கள் முழுவதுமாக தாளத்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள்! 160. அப்பொழுது உண்மையான காரியம் இங்கே ஒரு சிறு கூட்டத்திற்கு மத்தியில் சம்பவிக்கத் துவங்கும்போது, நீங்கள், "சரி, அதைக் குறித்து என்ன, அவர்கள் இசைவாக இல்லை" என்று கூறுவீர்கள். வார்த்தைக்கு திரும்பிச் சென்று, யார் இணக்கமற்றவர்கள் என்று பாருங்கள். தேவன் என்ன வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று பாருங்கள். அதைக் குறித்து இசையமைப்பாளர் என்ன கூறினார் என்று பாருங்கள். 161. பாருங்கள், நீங்கள் ஒவ்வொருவரையும் உங்களுடைய கூட்டத்தில் வைத்திருக்கிறீர்கள். அந்தக் காரணத்தினால்தான் உலகம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சபையானது ஒரு பிரகாசமான, பிரகாசிக்கும் நட்சத்திரமாக காணப்பட வேண்டியதாயிருக்கும்போது, ஒரு மலையின் மீது ஒளிரும் ஒரு ஒளி, அதை எந்த மனிதனும் மிஞ்ச முடியாது, அதை எந்த மனிதனும் கண்டனம் செய்ய முடியாது. 162 மேலும், இன்றைக்கு, அது உலகத்தின் நகைப்புக்குரிய இடமாய் உள்ளது, ஏனென்றால் இயக்குனர்கள் அதை இசையமைப்பாளருக்கு இசைவாக அமைத்துக் கொள்ளவில்லை. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அவர்கள் அங்கு இல்லாத காரியங்களை இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். இசைக்கலைஞர்களுக்கு இப்பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை; சபையானது, அவர்கள் யாவரும் ஒரு குழப்பத்தில் உள்ளனர். நாம் இந்த எல்லா காரியங்களைக் குறித்தும், அநேக வருடங்களாகப் பேசி, அதைக் கண்டித்தும், இப்பொழுது அதனோடு சேர்ந்து கொண்டிருக்கிறோம். ஓ, எங்கோ ஏதோ தவறு உள்ளது. 163. கவனியுங்கள், அவர் செய்தவிதமாக நீங்கள் இசையில் துவங்கி, அதனுடைய தாளத்திற்குள்ளாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தைக்குள் பிரவேசிக்க வேண்டும். அவர் துவக்கத்தில் அதைச் செய்த விதத்தைப் பாருங்கள், மத்தியக் காலத்தில் அவர் அதைச் செய்த விதத்தைப் பாருங்கள், அவர் இப்பொழுது அதைச் செய்கிற விதத்தைப் பாருங்கள், எப்பொழுதும் அதேவிதமாகவே உள்ளது. 164 இயக்குனர் அதை எப்படி செய்கிறார் என்பதைக், கவனியுங்கள். அவர் அதைச் செய்யவில்லையென்றால், அவர் உங்களை ஏதோ ஒரு ஸ்தாபனத்திடம் சுட்டிக்காட்டினால்; ஒரு இயக்குனரும் அதை ஒருபோதும் செய்ததில்லை. ஒரு இயக்குனர் உங்களை வார்த்தைக்கு எப்பொழுதும் சுட்டிக் காண்பிப்பார். பண்டைய தீர்க்கதரிசிகள் வார்த்தையை சுட்டிக் காட்டினர். அவர்கள் வார்த்தையாயிருந்தனர். அவர்கள் வார்த்தையின்படி வாழ்ந்தனர். அது என்ன செய்தது? அது தேவனை வெளிப்படுத்தினது. அது அந்த நாளுக்கான எழுதப்பட்ட வார்த்தையை உயிர்ப்பித்தது, ஏனென்றால் அது அவர்களிடத்தில் வந்தது. அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது அவர்களுடைய கன்மலையாயிருந்தது. அல்லேலூயா! 165. தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய கன்மலையாயிருக்கிறார். "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்," வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை. உண்மையான விசுவாசிக்கு, ஷாலோம். சமாதானம்! நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்" என்பது வார்த்தையின் வெளிப்பாடு. 166. ஒருவர், "சரி, நீர் ஒரு மகத்தான மனிதர். நீர் மோசேயைப் போன்றிருக்கிறீ. நீர் ஒரு மகத்தான மனிதன். நீங்கள்..." அதுவல்ல அது. ஆனால் வெளிப்பாடு, "நீர் தேவனுடைய குமாரன்" என்று கூறியுள்ளது. 167. மேலும், "மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப் படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்த வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் மேல், நான் என்னுடைய சபையைக் கட்டுவேன்" என்றார். 168. அது என்ன? அவரே வார்த்தையாயிருக்கிறார். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது," அந்த வார்த்தை இன்னமும் தேவனாயிருக்கிறது. இன்றைக்கும் மாறாத அவர், அவர் இருந்த வண்ணமாகவே தம்மை வெளிப்படுத்துகிறார்; மோசேயும் எலியாவும், இயேசுவும், இன்றைக்கும் அதே தேவன், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று எபிரெயர் 13:8-ல் கூறுகிறது. பாருங்கள், அவர்கள் உங்களை ஒரு குழுவிற்கு ஒருபோதும் சுட்டிக்காட்டவில்லை. அவர்கள் உங்களுக்கு ஒரு நபரை சுட்டிக் காட்டினர், ஒரு வார்த்தையை, தேவனை உங்களுக்கு சுட்டிக் காட்டினர். "சகோதரன் பிரான்ஹாம், நான் எங்கிருந்து துவங்குவது?" 169. சிலுவையில், அவரோடு சிலுவையில் துவங்குங்கள். "மனந்திரும்பி, வார்த்தையை விசுவாசியுங்கள்" என்று வேதம் கூறியுள்ளது. அதன்பின்னர் மற்ற வார்த்தையின் தாளத்தினூடாகப் பின்பற்றுங்கள். நீங்களோ, "சரி, நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கலாம். 170. வார்த்தையின் தாளத்தின்படி தொடர்ந்து பின்பற்றுங்கள். மனந்திரும்புதலே அடையாளங் கண்டு கொள்வதில் முதல் காரியம் என்றால், அதைச் செய்யுங்கள், அதுவே உங்களுடைய முதல் படியாகும். வார்த்தை கூறுகிற இடத்தில் உங்களுடைய அடுத்த அடியை வையுங்கள். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து அவரோடு அணிவகுத்து சென்று கொண்டிருங்கள். 171. நீங்கள் தேவனுடைய இசைக்கருவி இசையின் ஒரு பாகமாக இருந்தால், தாளத்தை மீறாதீர்கள். வார்த்தையின் தாளத்தை மீறாதீர்கள். "சரி, ஏன்? இது ஏன் சம்பவித்தது? நான் அதை முயற்சித்தேன், சகோதரன் பிரான்ஹாம், அவர்கள் என்னை வெளியேற்றினபோது, நான் என்ன செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் பட்டினி கிடந்து மரிக்க விரும்புகிறேன்" என்று கேட்காதீர்கள். ஏன் என்று கேட்காதீர்கள். அவர் தாளத்தையும், அது எப்படி மாற வேண்டும், அது என்ன இணைப்புகளை உண்டாக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார், ஆம், ஐயா, அது எழுதப்பட்டிருக்கிறது. அவர் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் தாளத்தை அறிந்திருக்கிறார். ஏன் என்று கேட்காதீர்கள். அதை விசுவாசியுங்கள்! 172. தேவன் சரித்திரத்தின் காலத்தினூடாக, ஒவ்வொரு காலத்திலும், தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையோடு, தேவனுடைய வல்லமையால் தெரிந்து கொள்ளப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்ட ஜனங்களுக்கு வரும்போது, அதைக் கொண்டு தாளத்தை ஒருபோதும் மாற்றத் தவறவில்லை. நோவாவின் நாட்களில் அவருடைய வார்த்தையின் தாளமும், நோவாவின் நாட்களில் அவருடைய வார்த்தையின் தாளமும், மோசேயின் நாட்களில், எலியாவின் நாட்களில், யோவானின் நாட்களில், தாவீதின் நாட்களில், இயேசுவின் நாட்களில், தொடர்ந்து, அவர் வார்த்தையின் தாளத்தை சரியாக தொடர்ந்து வைத்திருக்கிறார், அதை ஒருபோதும் மீறவேயில்லை. அவர் சரித்திரத்தினூடாக வந்திருக்கிறார். தெரிந்து கொள்ளப்பட்ட வித்து, அதைக் கண்டு, அதை விசுவாசித்தது, அதனோடு அந்த தாளத்தில் சரியாக விழுகிறது. 173. மற்றவர்கள், "நல்லது, ஆனால் சபை கூறுகிறது..." என்கின்றனர். அதற்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நீங்கள் அதற்கு பிறக்கவில்லை. 174. நீங்கள் வார்த்தைக்குள்ளாகப் பிறந்திருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் பிறந்திருக்கிறீர்கள். கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார், ஆம் ஐயா, ஒவ்வொன்றும் அதனதன் காலத்தில் உள்ளது. 175. நீங்களோ, "சரி, சகோதரன் பிரான்ஹாம், நான் உங்களுக்குச் சொல்லுவேன், என்னால் முன்னோக்கிப் பார்க்க முடியாது" என்று கூறலாம். 176. அப்படியானால் மேலே நோக்கிப் பாருங்கள். நீங்கள் மேலே நோக்கிப் பார்த்தால், அவரைக் காண்பீர்கள் என்று தேவன் வாக்களித்துள்ளார். ஷாலோம், சமாதானம், தேவனுடைய சமாதானம் உங்களிடத்தில் தங்கியிருப்பதாக. 177. நீங்களோ, "அப்படியானால் சகோதரன் பிரான்ஹாம், மற்றவர்கள் ஏன் என்னைக் குறித்து பரிகசிக்கிறார்கள்? மற்றவர்கள் என்னைக் குறித்து கேலி செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், நான்-நான் நீண்ட தலைமுடியை உடையவளாயிருக்கிறேன் என்றும், நான் 'பண்டைய நாகரீகம் கொண்டவள்' என்றும்" என்று ஸ்திரீகளிடம் கூறுகிறீர்கள். அந்த மனிதனோ, "நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறபடியால், 'நீ இனிமேல் எங்களோடு ஐக்கியங் கொள்ளமாட்டாய். நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் அது-நீங்கள் இன்ன மற்றும் இன்ன என்று நம்புகிறீர்கள்." 178. வார்த்தை சரியாக அந்த விதமாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது அதை ஆதரிக்க, தேவன் உங்களுக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார். அவர் நிச்சயமாகவே இருக்கிறார். அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, அவர்கள் ஏன் பரிகசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தேவன் ஒரு எரிச்சலுள்ள தேவன். நினைவிருக்கட்டும், அவருடைய வார்த்தையின் நிமித்தமாக பாடுபடுதல் அவருடைய கிருபையின் பெருகிய வலிகளாயிருக்கிறது. நீங்கள் அவருடைய வார்த்தையின் நிமித்தமாக பாடுபடும்போது, அது வளர்ந்து வரும் வலிகளாகும். 179. பத்து, பன்னிரண்டு வயதுடைய ஒரு சிறு குழந்தைக்கு எப்படி வலி ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். உள்ளே வந்து, 'அம்மா, என் கைகள் வலிக்கின்றன, என் கால்கள் முதலியன வலிக்கின்றன" என்று கூறும். அது வளர்ந்து கொண்டிருக்கும் வலிகளாகும். அந்தப் பிள்ளை சில நல்ல ஊட்டச்சத்துக்களை பெற்றுள்ளதை அது காண்பிக்கிறது. அவன் வளர்ந்து வருகிறான். 180. யாராவது உங்களை பரிகசிக்கத் துவங்கும்போது, "அவள் பண்டைய நாகரீகமானவள். அவரைப் பாருங்கள், அவர்...ஓ, நான் உங்களுக்கு கூறுவேன், அவர் வழக்கமாக..." என்று கூறுகிறார்கள். சரி, நினைவிருக்கட்டும், அது வளரும் வலிகள். அந்த துன்புறுத்தல் உங்களுக்கு நன்மையாயுள்ளது. அது வளரும் வலிகளாகும். 181. ஓ, ஆம், அவர் சிலுவைகளையும், குறுக்கு வழிகளையும், இணைப்புகளையும் அனுமதிக்கிறார். அவருடைய ஊழியத்திற்காக நம்மை பரிபூரணப்படுத்த அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார். அந்தக் காரியங்கள் சம்பவிக்க அவர் அனுமதிக்கிறார். உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? அவர் உங்களை அழைத்திருக்கிற அழைப்பிற்காக உங்களை பரிபூரணப்படுத்த அவர் அதைச் செய்கிறார். அதுவே உங்களுடைய வளர்ந்து வரும் வேதனையாயுள்ளது. அவர் தானியேலுக்கு அந்தவிதமாக செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 182. அவர் எபிரெய பிள்ளைகளுக்கு, அக்கினிச் சூளையில் செய்தார். அக்கினிச் சூளை என்ன செய்தது? அக்கினி சூளையானது கட்டப்பட்டிருந்த கட்டுகளை மாத்திரமே எரித்துப்போட்டது. அவ்வளவுதான் சூளை செய்தது, கட்டுகளை அவிழ்க்கச் செய்தது. 183. சில சமயங்களில் நம்மை விட்டு உலகத்தின் கட்டுகளை தகர்த்தெறிந்து, உங்களை உலகத்திற்கு வெளியே கொண்டு செல்ல சோதனைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் முதலில் உங்களுடைய கோட்பாட்டிலிருந்து உங்களை வெளியே எடுக்க வேண்டியிருக்கலாம். மனிதன் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருப்பது போல, நீங்கள் அந்த மனிதனிலிருந்து ஆற்றை வெளியே எடுப்பதற்கு முன்பு நீங்கள் அவனை ஆற்றிலிருந்து வெளியே எடுக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் தேவன் சில சமயங்களில் செய்ய வேண்டும். ஒரு முறை அவர்கள் உங்களை வெளியே எறியட்டும், அப்பொழுது அவர்கள் உங்களிடத்திலிருந்து உலகத்தை வெளியே எடுத்துவிடுவார்கள். முதலில் உங்களை உலகத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். சில நேரங்களில் இந்த வளர்ந்து வரும் வலிகளே அதைச் செய்கின்றன. ஓ, ஆம். 184. தேவன் பண்ணப்பட்ட ஒவ்வொரு புத்தாண்டிலும் வாக்குத்தத்தம் வார்த்தையின் பேரில் நிற்கிறார். இந்த வருடத்திற்காக அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறதை நிறைவேற்றும்படியாக இந்த வருடம் அவர் அதன்மேல் நிற்கிறார். அது என்னவாயிருந்தாலும், அவர்கள் செய்தது போல, நான் எதிர்காலத்தில் அவருடைய சித்தத்தின் மையத்தில் சரியாக இருக்க விரும்புகிறேன். 185. ஆபிரகாமைப் போல, அவன் தன்னுடைய குறுக்கு வழியை சந்தித்தபோது, அவன் அதை எப்படி செய்வான் என்பதை அறியாதிருந்தான். தேவன் அவனிடம், "நான் உனக்கு ஒரு குமாரனைக் கொடுக்கப் போகிறேன்" என்றார். அதற்காக அவன் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தான். முடிவிலே குமாரன் வந்தான், அப்பொழுது தேவன், "இப்பொழுது, இந்த குமாரன் மூலமாய் நான் உன்னை அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக்கப் போகிறேன். அவனை அங்கே கொண்டு சென்று கொல். அவனைக் கொண்டுபோய் கொல்," என்றார். அவன் இருபத்தைந்து வருடங்களாக காத்திருந்த அதே காரியத்தை அழித்துப் போட வேண்டியதாயிருந்தது. "அவனை மேலே கொண்டு சென்று கொல்." 186. ஆபிரகாம் ஒருபோதும் கவலைப்படவில்லை. அது அவனை ஒருபோதும் தொல்லைப்படுத்தவில்லை. அவன் விறகுகளை எடுத்து, அதை ஒரு சிறு கழுதையின் மேல் வைத்து, தன்னுடைய மகனைக் கொண்டு சென்றான். அதை பலி செலுத்த மலையின் உச்சிக்கு கொண்டு சென்றான், ஏனென்றால் ஆபிரகாம் அவனை மரித்தோரிலிருந்து ஒருவனாகப் பெற்றுக்கொண்டான் என்பதை அறிந்திருந்தான்; சாராளின் கர்ப்பம் செத்துப்போய்விட்டிருந்தது, அவன் மலட்டுத்தன்மையாயிருந்தான், எனவே அதற்கு வழியே இல்லை. அந்த பையன்...அவன் நூறு வயதுடையவனாயிருந்தான். அவளுக்கு தொண்ணூறு வயது, அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின்படி வந்தான். வாக்குத்தத்தம் பண்ணின அதே தேவன், "நான் உன்னை ஜாதிகளுக்கு தகப்பனாக்குவேன்" என்று கூறினார். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, அவரும் அவருடைய மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். அவனை பலி செலுத்தும்படி தேவன் அவனிடத்தில் கூறியிருந்தால், தேவனால் அவனை எழுப்ப முடியும். ஆமென். 187. சகோதரர்களே, தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் நன்றாக உணருகிறேன். நான் பக்திப் பரவசமடைகிறேன். எனவே நான் எவ்வளவு நன்றாக உணருகிறேன்! இந்த ஒரு காரியத்தை நான் அறிவேன், அவர் அவனை மீண்டும் எழுப்ப வல்லவராயிருக்கிறார். நாம் இந்த வேளையில் கலப்படமற்ற ஒளியின் வார்த்தையின் பேரில் நிற்போம்! இந்த சந்ததி வரும்போது, இந்த சந்ததிக்கு எதிராக பிரகாசிக்கும் ஒளிகளாக தேவன் நம்மை எழுப்புவார். ஆமென். 188. அவர், "தென்தேசத்து ராஜஸ்திரீ தன் சந்ததியோடு, நியாயத்தீர்ப்பில் எழும்பி, இந்த ஒன்றைக் கண்டனம் செய்வாள்; ஏனென்றால் அவள் பூமியின் எல்லைகளிலிருந்து, சாலமோனின் ஞானத்தைக் கேட்கவும் வந்தாள், மேலும், இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்" என்று கூறினதில் வியப்பொன்றுமில்லையே. எப்படியாய் அந்த சிறிய இராணி, ஒரு அஞ்ஞானி, அந்த ஒளியைக் கண்டு, பாலைவனத்தின் வழியாக பல மைல்கள் தூரம் எப்படி வந்தாள், சாலமோனின் ஞானத்தைக் கேட்க மூன்று மாதங்கள் ஒட்டகத்தின் மேல் அமர்ந்து வந்தாள், அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள், சாலொமோன் அவருக்கு ஒரு மாதிரியாக, ஒரு உருவகமாக இருந்தார். 189. அதன்பின்னர் அங்கு வந்து வெஸ்லி, லூத்தர், மற்றும் அங்கிருந்த மற்ற ஸ்தாபனங்கள், இப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதற்கு ஒரு மாதிரியாயிருந்து, அவர்கள் அதனூடாக நடந்து செல்கின்றனர். ஓ! சரி. 190. ஏனென்றால், புத்தாண்டு தேவனால் தீர்மானிக்கப்படுகிறது, அவருடைய வார்த்தையில் நிலைத்திருக்க தீர்மானியுங்கள். வார்த்தை கூறுகிறபடி நடவுங்கள், நாம் இப்பொழுது முடிவிற்கு வரும்போது, மற்றவர்களைப் போலவே, அவர்கள் வார்த்தையை கண்டபோது தெரிந்து கொள்ளப்பட்ட வித்தும் அவர்களுடைய நாட்களில் அவ்வாறே நடந்தார்கள். அவர்கள் அதற்கு என்ன செய்தனர்? அவர்கள் மற்ற காலங்களில் தெரிந்து கொள்ளப்பட்ட வித்தாயிருந்ததால், அவர்கள் அதில் சஞ்சரித்தனர், ஏனென்றால் அவர் தவறாத வார்த்தையாயிருக்கிறார். இயேசு கிறிஸ்து வார்த்தை என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஓ, என்னே! 191. அன்றொரு நாள் ஒரு குறிப்பிட்ட, ஸ்தாபன ஜனங்களின் நிகழ்ச்சி நிரலைக் கேட்டேன், திரு. எச். எம். எஸ். ரிச்சர்ட்ஸ், 'அந்த வருடத்திற்கான புத்தகத்தை அவர் எழுதிவிட்டார்" என்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதனோடு நான் முரண்பட விரும்பவில்லை. ஏழாம் நாள் ஆசரிப்புக்காரனாயிருக்கிறபடியால், ஏழாம் நாள் ஆசரிப்புக்கார உபதேசத்தை நான் ஏற்கவில்லை என்றாலும், ஆனால் நான் நிச்சயமாகவே அந்த மனிதனை விரும்புகிறேன். ஆனால் நான் அவருடன் இணங்கவில்லை. அது எச். எம். எஸ் ரிச்சர்ட்ஸின் புத்தாண்டிற்கான புத்தகமாக இருக்கலாம். 192. ஆனால் புத்தாண்டிற்கான என்னுடைய புத்தகமும், உங்களுடைய புத்தகமும், பழைய வருடத்தின் புத்தகமுமாக இருப்பது, தேவனுடைய வார்த்தையான வேதாகமமே. அது எதற்காக ஜீவிப்பதாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே ஜீவிக்கச் செய்யும். ஆம், ஐயா. வரப்போகும் ஒவ்வொரு வருடமும், இருந்த ஒவ்வொரு வருடமும், அவர் உரைத்த நித்திய வார்த்தையினூடாக ஜீவிக்கிற நித்திய தேவனாயிருக்கிறார், ஒவ்வொரு வேதாகம சத்தியமும், அதில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் பல வருடங்களாக அது ரூபகாரப்படுத்தப்பட்டு வருகிறது. 193. எப்படி தேவன் உலகத்தை தண்ணீரினால் அழிப்பதாக வாக்குப்பண்ணினார், அவர் அதை மோசேயைக் கொண்டு... இல்லை நோவாவின் மூலம் ரூபகாரப்படுத்தினார். 194. அவர் ஒரு மீட்பரை அனுப்பி, இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரப் போவதாக வாக்குப்பண்ணினார்; அவர்கள் நானூறு வருடங்களாக பரதேசிகளாய் இருந்தனர். அவர் சரியாக அதைச் செய்தார். 195. அவர் தாவீதை எழுப்புவதாகவும், தாவீது எப்படி ஒரு- ஒரு குமாரனாயிருப்பான் என்றும்; கிறிஸ்து அவனுடைய குமாரனாயிருப்பார் என்றும், தாவீதினூடாக கிறிஸ்து வருவார் என்றும் ஆணையிட்டார். அவர் அதைச் செய்வதாக எப்படி அவர் ஆணையிட்டார்; அவர் அதைத்தான் செய்தார். 196. இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் யோவான் ஸ்நானனை அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். அவர் அதைத்தான் செய்தார். அவர் மேசியாவை அனுப்புவதாக வாக்குப்பண்ணினார். அவர் அதைத்தான் செய்தார். 197. உலகம் ஒரு பெரிய ஸ்தாபன அமைப்புக்குள் நுழைந்து, ஒரு முறைமையை உருவாக்கும் என்றும், மிருகம் என்று அழைக்கப்படும் ஒரு வல்லமை, ஏழு மலைகளின் மேல் அங்கே அமர்ந்திருக்கும் என்று அவர் உறுதியளித்தார். அது சரியாக அதையே செய்தது. 198. சபையானது அவர்களை மரணத்திற்கு, எப்படியாய் துன்புறுத்திக் கொண்டிருக்கும்! அவர்கள் சரியாக அதையே செய்தனர். 199. சீர்திருத்த காலத்தில் அவர்கள் எப்படியாய் வெளியே வந்திருப்பார்கள்! அவர்கள் சரியாக அதையே செய்தனர். ஒவ்வொரு காலத்திலும் அது எவ்வளவாய் இருக்கும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தாரே! 200. அவர் இந்தக் காலத்திற்காக வாக்குப்பண்ணினார். இதோ அவர், இன்றைக்கு, அவர் ஆதியில் செய்தவிதமாகவே இன்றைக்கும் அந்த வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறார். நிச்சயமாக. 201. ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நிறைவேற்றப்படும்போது, "மரணமானது ஜெயமாக விழுங்கப்படும்," இயேசு வருவார்; கடைசியானவர் ரூபகாரப்படுத்தப்படும்போது, அப்பொழுது பூமியின் மேல் நித்திய சமாதானமும், நித்திய ஷாலேமும் உண்டாகும். ஒரு நித்திய ஷாலேம், சமாதானம், பூமியின் மேல் தங்கியிருக்கும். 202. சமாதானப் பிரபுவாகிய இயேசு வந்தபோது, ஏன் அங்கே சமாதானம் இருக்கவில்லை? ஏனென்றால் அவருடைய நாளில் எல்லா வார்த்தையும் நிறைவேறவில்லை. அவர் அதை இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் தேவனுடைய சிந்தையாயிருந்த அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை யாவும்... 203. ஒரு வார்த்தை என்பது "வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனை" ஆகும். தேவன், தம்முடைய சிந்தையில், அதை சிந்தித்து, தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக அதை வெளிப்படுத்தினார், இப்பொழுது அது நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், நாம் தவறு செய்து, இருளில் தவறிழைக்காதபடிக்கு, அவர் இந்தக் காரியங்களைக் குறித்து நமக்கு முன்னறிவித்தார் பின்னர், அது நிறைவேறுவதை நாம் காணும்போது. 204. இப்பொழுது, அவர் கிறிஸ்துவை இரண்டாம் முறை அனுப்புவதாக வாக்குப்பண்ணினார். அவர் செய்கிறபோதெல்லாம், கிறிஸ்து இரண்டாம் முறை வரும்போது, நித்திய ஷாலோம் இருக்கும். 205. நண்பர்களே, நாம் முடிக்கையில், கவனியுங்கள். வேதம் எல்லா ஞானத்திற்கும் ஊற்றாய் உள்ளது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அது முனைவர், பிஎச். டி., எல்எல். டி போன்றவற்றிலிருந்து வருவதில்லை. அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது. 206. அங்கே நூற்றுக்கணக்கான, தெய்வீக வேத பண்டிதர்கள் அமர்ந்திருந்தனர், ஒரு சிறு பன்னிரெண்டு வயது பையன் அவர்களை அழைத்தான், ஏனென்றால் அவர் வார்த்தையாயிருந்தார். அந்த சிறு பையனுக்கு கல்வியே இல்லாதிருந்தது, அதே சமயத்தில் அவர் வார்த்தையாயிருந்தார். ஏனென்றால் அவர் அந்த நாளுக்காக உரைக்கப்பட்ட ஒளியாயிருந்தார், அவர் அந்த வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். வார்த்தை அவருக்குள் இருந்தது. அது அவ்வாறு இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் கூறினது நிறைவேறினது என்பதில் வியப்பொன்றுமில்லை, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருந்தார். உங்களுக்குப் புரிகிறதா? புரிந்து கொண்ட யாவரும், "ஆமென்" என்று கூறுங்கள். (சபையோர், "ஆமென்" என்கின்றனர்.-ஆசி.] அவர் வார்த்தையாயிருந்தார். 207. வேதாகமத்தை நினைவில் கொள்ளுங்கள், மனிதனால் எழுதப்பட்ட வருடத்திற்கேற்ற புத்தகம் அல்ல. "ஒவ்வொரு மனிதனின் வார்த்தையும் பொய்யாக இருக்கட்டும், ஆனால் என்னுடையது சத்தியம்." 208. வழிபாட்டு முறைகள், மதங்கள், மற்றும் மற்றும் மற்றவை, நீங்கள் அதற்குள் ஒரு கூட்ட மனிதர்களை நுழைக்கும்போது, எல்லாமே மிகவும் குழப்பமடைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு குழுவில் தேவன் ஒருபோதும் இடைபடவேயில்லை. இயேசு இன்றைக்கு வருவாரானால், அவர் மெத்தோடிஸ்டுகளின் பட்சத்திலும், பாப்டிஸ்டுகளின் பட்த்திலும், ஆசரிப்புக்காரர்களின் பட்சத்திலும், யேகோவா சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானமா, பெந்தேகோஸ்தேக்களா, பிரஸ்பிடேரியன்கள் பட்சத்தில் இருப்பாரா? இல்லை ஐயா. அவர் நிச்சயமாக அவ்வாறு செய்யமாட்டார். 209. அது உங்களுக்கும் தேவனுக்கும், ஒரு தனிப்பட்ட விவகாரம். ஒருமித்து ஒரே விதமாகப் பார்க்கிற இரண்டு புருஷரும் இல்லை; இரண்டு கட்டை விரல்களும் ஒரே மாதிரியாக இருக்காது. தேவன் ஒரு தனிப்பட்ட நபருடன் இடைபடுகிறார். அவர் கூறுவது சரியா அல்லது இல்லையா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்படியானால் அவன் வார்த்தையோடு இருக்கிறானா என்று பின்னோக்கிப் பாருங்கள். அவன் வார்த்தையோடு இருந்தால், அப்பொழுது தேவன் அவனோடு இடைபடுகிறார்; அவன் அவ்வாறு செய்யவில்லையென்றால், வேறு ஏதோ காரியம் அவனோடு இடைபடுகிறது. பார்த்தீர்களா? அது உண்மை. 210. வேதம் எல்லா ஞானத்திற்கும் ஊற்றாய் உள்ளது என்பதை, நினைவில் கொள்ளுங்கள், எதிர்காலத்தின் எல்லா நம்பிக்கைகளையும் அதில் வைத்திருக்கிறார். ஷாலோம், தேவனுடைய சமாதானம்! 211. ஒரு சிறு பையன் தன்னுடைய தகப்பனைக் காணும் வயதிற்கு முன்னரே தன்னுடைய தந்தையை இழந்ததைப் பற்றி ஒரு காலத்தில் கூறப்பட்ட ஒரு கதையைப் போல்; அவனுடைய தந்தை மரித்தபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தான். ஒரு நாள் அவனுக்கு சுமார் பத்து, பன்னிரெண்டு வயதானது. அவனுக்கு ஜான் என்று அழைக்கப்பட்ட மற்றொரு சகோதரன் இருந்தான். அவன் தன்னுடைய சகோதரனிடத்திற்குச் சென்றான், அவன், "ஊ, ஜான்" என்று கூறினான். அவன் அநேக வயது மூத்தவனாயிருந்தான். அவன், "உனக்கு, உனக்கு தந்தையை ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஆம்" என்றான். "அவர் எப்படியிருந்தார்?" என்று கேட்டான். 212. அவன், "அவர் ஒரு உயரமான மனிதனாயிருந்தார், அவர் ஒரு மிக அருமையான மனிதனாயிருந்தார். அவர் எப்பொழுதுமே தாயாரிடம் நல்லவராகவே இருந்தார், என்னிடத்தில்-அவர் எல்லோரிடத்திலும் இரக்கமுள்ளவராயிருந்தார்" என்றான். அதற்கு அவன், "நல்லது, ஜான், அவரைக் குறித்து இவ்வளவுதான் தெரியுமா?" என்று கேட்டான். 213. அதற்கு அவன், "சரி, நான் உனக்கு சொல்வேன்" என்றான். மேலும், "ஹென்றி," என்று கூறி, மேலும், "நான்-நான் அவரைப் போன்று காணப்படுவதாக எல்லோரும் கூறுகின்றனர்" என்றான். மேலும், "நான் அவரைப் போன்ற ஒரு சுபாவத்தை உடையவனாயிருக்கிறேன் என்று எல்லோரும் கூறுகின்றனர்" என்றான். 214. அவன், "ஓ, அது நல்லது! அதைத்தான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான். "நான் உன்னைக் காணும்போது, நான் என் தந்தையாரைக் காண்கிறேன்" என்றான். 215. இதோ அது உள்ளது. உலகம் இயேசு கிறிஸ்துவைக் காணவேண்டுமென்றால், இன்றைக்கு எழுதப்பட்டுள்ள இந்த வார்த்தை, அது உங்களுக்குள் இருக்கும். 216. தாவீதில் இயேசுவை நீங்கள் எங்கே காண்கிறீர்கள்? அவன் மூலமாக வார்த்தை வெளிப்பட்டபோது. 217. நீங்கள் எப்படி கிறிஸ்து, தேவனை எலியாவில் காண்கிறீர்கள், அந்த இரதமானது பரலோகத்திற்குச் செல்லுகையில், எலியாவில் இயேசுவைக் காண்கிறார்களா? காரணம், வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட்டது. 218. அதை நீங்கள் எப்படி மோசேயில் காண்கிறீர்கள்? இயேசு மோசேக்குள் இருந்தார். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. பாருங்கள், அது உண்மை, அவர் வனாந்திரத்தில் மோசேயோடு இருந்த எரிகிற முட்செடியாக இருந்தார். 219. ஜனங்கள் எப்படி இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வார்கள்? அவர்கள், அவன், உங்களில் அவரைக் காணும்போது, அவர்கள் இயேசுவை உங்களுக்குள் காணும்போதே. ஏனென்றால் அவர், "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்" என்றார். அது சரியா? அந்தவிதமாகத்தான் அவர்களை, உலகம் அறிந்துள்ளது. 220. பெந்தேகோஸ்தே ஒருத்துவம் பெந்தேகோஸ்தே இருத்துவத்தைக் காட்டிலும் மகத்தானது என்றோ, அல்லது இருத்துவம் மூன்றுத்துவத்தைக் காட்டிலும், அல்லது நீங்கள் பெற்றுள்ள மற்றெல்லாவற்றைக் காட்டிலும் மகத்தானது என்ற காரணத்தினால் அல்ல; மெதோடிஸ்டுகள் பாப்டிஸ்டைக் காட்டிலும் பெரியவர்கள் என்ற காரணத்தினால் அல்ல; அல்லது தெற்கு பாப்டிஸ்ட், எல்லா-எல்லா பாப்டிஸ்டு சபைகளும், எல்லா ப்ராடெஸ்டெண்டுகளும் இந்த ஆண்டு அனைவரும் பரிசைப் பெறுகிறார்கள். இந்த ஆண்டு மற்றவைகளைக் காட்டிலும் அவர்கள் அதிகமான அங்கத்தினர்களைப் பெற்றுள்ளனர் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். அது அவர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குகிறதில்லை. தேவன் உங்களை எண்ணினால் அறியார். எந்த நேரத்திலும், அஞ்ஞானிகள் உங்களை எண்ணிக்கையில் மிஞ்சியேயுள்ளனர். கத்தோலிக்கர்கள் உங்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டனர். முகமதிய மார்க்கம் அவைகளையெல்லாம் மிஞ்சியுள்ளது. பார்த்தீர்களா? 221. இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவியத்தினால் உங்களுக்குள் ஜீவிக்கும்போது நீங்கள் அறியப்படுகிறீர்கள், இந்த நாளின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை தானே பிரதிபலிக்கிறது. பார்த்தீர்களா? 222. இப்பொழுது மோசேயில் பிரதிபலிக்கப்பட்ட அதே வார்த்தை எலியாவிலும் பிரதிபலிக்க முடியவில்லை, ஏனென்றால் அது மற்றொரு நாளாயிருந்தது. நோவாவில் பிரதிபலித்துக் கொண்டிருந்த அதே ஒன்று மோசேயிலும் இருக்க முடியாது, ஏனென்றால், பாருங்கள், நோவா ஒரு பேழையைக் கட்டினான், மோசே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தபடியே சரியாக ஒரு ஜனத்தை வழிநடத்தினான். அதே வெளிச்சம் மற்றொன்றில் பிரதிபலித்தது, மற்றொன்றில் இல்லை, ஆனால் ஒன்று மற்றொன்றைக் குறித்து கூறப்பட்டது. 223. புதிய ஏற்பாடு முழுவதும் இந்த நேரத்தைக் குறித்து பேசுகிறது. இயேசு கிறிஸ்து இந்த நேரத்தைக் குறித்து பேசுகிறார். அப்படியானால், இது யார், வேறொரு மனிதனா? அது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டு, இந்த நாளுக்காக அவர் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையின் பேரில் வெளிச்சத்தை பிரதிபலிப்பதாய் உள்ளது. 224. நீங்கள் அவரைப் போல ஜீவிப்பதை மனிதன் காணும்போது, அவன் உங்களுடைய குணாதிசயத்தையும், வார்த்தையோடு உங்களுடைய நடத்தையையும் சரியாக அவர் இருந்தவிதமாகவே காணும்போது, வார்த்தை வெளிப்படுத்தப்படும் போது, மனிதன் இயேசு கிறிஸ்துவைக் காண்பான். அவர்கள் வேறு எங்கும் சுற்றும் முற்றும் பார்த்து, "இந்த கோட்பாடு என்ன போதிக்கிறது, அந்த கோட்பாடு என்ன போதிக்கிறது?" என்று கேட்க வேண்டியதில்லை. அவர்கள் உங்களைக் காணும்போது தேவன் என்னவாயிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 225. ஷாலோம், தேவனுடைய சமாதானம் உங்கள் மேல் வெளிச்சம் உண்டாவதாக! இக்காலத்தில் தேவனுடைய வார்த்தை முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டு, நீங்கள் அதைக் கண்டு, அதை விசுவாசிக்கும்போது, உங்களுக்கு ஷாலோம்! 226. புத்தாண்டை இதனோடு எதிர்கொள்வோமாக, தாவீது கூறினது போல, "நான் அவரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைப்பேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படுவதில்லை." இந்த ஆண்டில் நீங்கள் மரணத்தை சந்திப்பீர்களானால், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? தேவன் உங்களை எழுப்புவதாக வாக்களித்துள்ளார். ஒரு விபத்து உங்களைக் கொன்றுவிட்டால், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள், "நான் அவனை கடைசி நாட்களில் எழுப்புவேன்." ஆமென். ஏதாவது சம்பவித்தால் என்னவாகும்? அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, கிறிஸ்துவுக்குள் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து, எதுவுமே நம்மை பிரிக்க முடியாது. "பசியோ, நாசமோசமோ, நிர்வாணமோ, அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, கிறிஸ்துவுக்குள் இருக்கிற தேவனுடைய அன்பிலிருந்து எதுவுமே நம்மை பிரிக்க முடியாது." அவர் வார்த்தையாயிருக்கிறார். ஷாலோம்! 227. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்பொழுது ஒவ்வொருவரும் உங்களுடைய தலைகளை சற்று நேரம் வணங்கியிருங்கள். தேவனுடைய சமாதானம்! 228. "காரி..." [ஒலிநாடாவில் காலியிடம்) "நோவாவின் நாட்களில் நடந்தது போல, அங்கே அவர்கள் புசித்து, குடித்து, பெண் கொண்டு கொடுத்தார்கள்," ஒரு ரெனோ, நெவாடா போன்ற இடங்களில் நடப்பது போல, மற்றும் சிவப்பு விளக்கு உலகம் முழுவதுமே, "மனுஷகுமாரன் வரும் காலத்திலும் அப்படியே நடக்கும்." 229. "சோதோமில் நடந்தது போல," ஆபிரகாம் ஏலோஹிம் என்று அழைத்த ஒரு மனிதனில் வெளிப்படுத்தப்பட்டு, எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர்; அங்கே நின்று இறைச்சியையும், அப்பத்தையும் புசித்து பாலைப் பருகி; சாராள் தனக்குப் பின்னாக, அவருக்குப் பின்னாக கூடாரத்தில் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்பதை கூற முடிந்தது. அவர், "மனுஷகுமாரன் வருகையில் அது திரும்ப வரும்" என்றார். "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்." 230. யூதர்கள் தங்களுடைய தேசத்திற்கு திரும்பி வருகின்றனர். இந்நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்கள், என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதிலிருந்து என்னை ஆரம்பத்திலேயே தடுக்கலாம், ஆனால் நாம் அதைக் காண்கிறோம். அது என்ன? வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. 231. வார்த்தையானது ஒரு வாக்குத்தத்தத்தோடு வெளிப்பட்டதை எபிரெயர்கள் கண்டபோது, அவர்கள் என்ன செய்தனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் தேசத்தை விட்டுச் செல்ல ஆயத்தமானார்கள். 232. நண்பரே, நீங்கள் இன்றைக்கு ஆயத்தமாகவில்லையென்றால், இந்தப் புத்தாண்டை சரியாகத் துவங்குங்கள், அதை உங்களுடைய கரம் தேவனுடைய கரத்தில் இருப்பதோடு, தேவனுடைய வார்த்தை உங்களுடைய இருதயத்தில் இருக்க, "கர்த்தராகிய இயேசுவே, இந்த இசைக்கருவியின் இசையில் எந்த பாகத்தை நான் இசைக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்த இணைப்பில் நான் துன்புறுத்தப்படவும், நகைக்கப்படவும், பரிகசிக்கப்படவும் வரும்போது, என் நிமித்தம் உம்முடைய இசைக்கருவியின் இசையானது குழப்பமடையாது என்ற என்னுடைய நிலைப்பாட்டை நான் இன்னமும் எடுத்துக் கொள்கிறேன். அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், நான் உம்முடைய வார்த்தையோடு தரித்திருப்பேன். நான் அங்கேயே தங்கியிருப்பேன். மரணம் என் வாசலைத் தட்டும்போது, அது இசைக்கருவியின் இசையானது ஒரு பாகமாக இருக்கிறது. அப்பொழுது நான் அறிவேன், அது, எவ்வளவு நிச்சயமாய் மரணமானது என்னுடைய வாசலை தட்டுகிறதோ, அவ்வளவு நிச்சயமாக உயிர்த்தெழுததிலும், கூட, இந்நாட்களில் ஒன்றில் தட்ட, நீர் என்னை மீண்டும் எழுப்புவீர். அது உம்முடைய இசைக்கருவியின் இசையின் ஒரு பாகமாகும். கர்த்தாவே, இன்றைக்கு நான் ஒரு பங்காயிருப்பேனாக, நீர் செய்வீரா?" என்று கேளுங்கள். 233. எத்தனை பேர் அந்த உறுதிமொழியை எடுக்க விரும்புகிறீர்கள், "இந்த புத்தாண்டின் துவக்கத்தில், சகோதரன் பிரான்ஹாம், இப்பொழுதே இந்த கூட்டத்தை துவங்கி, இப்பொழுது என்னுடைய நிலைப்பாட்டை எடுக்கும்படி, அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையோடு சரியாக தரித்திருக்க ஒருபோதும் தவறமாட்டேன் என்றும், அவர் வாக்குத்தத்தம் பண்ணினவிதமாகவே சாந்தமாகவும், தாழ்மையாகவும் ஜிவிக்கும்படிக்கு நான் தேவனுக்கு வாக்குப்பண்ணுகிறேன்; தேவன் என்னுடைய ஜீவனை எடுத்து, அதை அவருடைய மகத்தான இசைக்கருவியின் இசையில் வைக்கும்படியாக, அதே குழுவை அவர் கடைசி நாட்களில் எழுப்புவார். சகோதரன் பிரான்ஹாம், நான் என்னுடைய கரத்தை உங்களிடமல்ல, தேவனிடத்திற்கு உயர்த்தப் போகிறேன். ஜெபத்தில் என்னை நினைவு கூறுவீர்களா"? தேவன் உங்களை, எங்கும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய கரங்களும் கூட உயர்த்தப்பட்டிருக்கின்றன. 234. கர்த்தாவே, என்னை ஏற்றுக்கொள்ளும். தேவனாகிய கர்த்தாவே, யூதாஸைப் போல, ஒரு கூடுதல் டாலரின் பேரில், ஏதோ ஒரு உலக நாகரீகத்தின் பேரில், அல்லது யாரோ ஒருவர் உங்களை முதுகில் தட்டிக் கொடுத்து, "ஓ, சகோதரன் பிரான்ஹாமே, இது..." என்று கூறுவதன் பேரில் என் மனதை ஒருபோதும் செல்லவிடாதேயும். இல்லை, இல்லை. தேவனே, அது எனக்கு ஒருபோதும் நேரிடாதிருக்கட்டும். கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியையே நான் தெரிந்து கொள்வேன். நான் மனிதனுக்கு ஒரு சகோதரனாயிருந்து, என்னால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்வேன், கர்த்தாவே, என் முழு இருதயத்தோடு ஜனங்களை நேசிப்பேன். ஆனால், கர்த்தாவே, இந்த வார்த்தையிலிருந்து நான் ஒருபோதும் இடம் பெயர்ந்து போக விடவே வேண்டாம். நான் கடைசி நாளில் எழும்ப விரும்புகிறேன். கர்த்தாவே, இந்த மகத்தான இசைக்கருவியின் இசையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமே, நான் இந்த பிற்பகலில் இதை விளக்க முயற்சித்தேன், அதுவே இசைத் தாளுடைய-முடிவில் வருகிறது, அந்த மகத்தான உயிர்த்தெழுதலின் போது, எல்லா தூதர்களும் தங்களுடைய கரங்களைத் தட்ட, பரிசுத்தவான்கள் அணிவகுத்து வருவார்கள். கர்த்தாவே, நாங்கள் நடிக்கும் இந்த மகத்தான நாடகத்தில் அந்தப் பாத்திரத்தை வகித்தவர்களுக்காக, ஜெபிக்கிறோம். 235. ஒரு நாடகத்தில் அவர்கள் முகமூடிகளை மாற்றிக்கொண்டு, அவர்கள் ஒரு காரியத்திலிருந்து மற்றொரு காரியத்திற்கு வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம், அதைத்தான் நீர் செய்தீர். நீங்கள் ஆவியிலிருந்து, தேவன், மகத்தான யேகோவாவிலிருந்து வந்து, ஒரு மானிட முகமூடியை அணிந்துகொண்டு, உம்முடைய உம்முடைய-உம்முடைய மன அழுத்தம்; நீங்கள் மாறிவிட்டீர்கள். நீர் உம்முடைய கூடாரத்தைப் போட்டீர். நீர் மனிதனை மீட்கும்படியாக மரிக்கும்படிக்கு, நீ தேவனிடத்திலிருந்து இறங்கி வந்து, மனிதனானீர். நீர் உம்முடைய முகமூடியை மாற்றினீர். 236. அதன்பின்னர் மீண்டும் நீர் அதை மாற்றியிருக்கிறீர், விசுவாசிக்கும் ஜனங்களுக்குள்ளாக நீர் உம்மை முகமூடி போட்டு மறைத்துக்கொண்டு நீர் இங்கே எழுதி வைத்துள்ள வார்த்தையின்படி செயல்பட வேண்டும். அதைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள், அதை ஏற்றுக்கொள்கிற இருதயங்கள் பாக்கியமுள்ளவைகள், அதைக் கேட்கிற காதுகள் பாக்கியமுள்ளவைகள், ஏனென்றால் இசைக் கருவியின் இசை முடிவுறும்போது ஒரு உயிர்த்தெழுதல் உண்டாகும். தேவனே, நாங்கள் யாவரும் அங்கே இருக்கட்டும், நீர் செய்வீரா? இந்த சிறு குழுவை ஆசீர்வதியும். 237. பிதாவே, இந்த விதமாகப் பேசுகையில், இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலும் செல்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இங்கே பீனிக்ஸில் காணக்கூடிய இந்த கூட்டம் இன்றைக்கு இங்கே ஒரு அருமையான, சிறிய குழு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஓ தேவனே, பதினைந்து வருடங்களாக கடுமையான பிரசங்கமும், திட்டுதலும், தேவனே, அதற்கான காரணத்தை அறிந்திருக்கிறீர், அது அன்பேயாகும்! அன்பு சிட்சித்துக்கொண்டிருக்கிறது. அன்பு என்பது கடிந்து கொள்ளுதலாகும். அன்பு கண்டிக்கத்தக்கது. 238. ஓ தேவனே, இந்த வாரத்தில் நான் இந்த ஜனங்களோடு என்னை இணைத்துக் கொள்வேனாக, கர்த்தாவே, உம்முடைய வார்த்தைக்கு நீர் எங்களை ஒழுங்குபடுத்தும். உம்முடைய வல்லமை வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் எழுப்புவதையும், குருடரின் கண்கள் திறக்கப்படுவதையும், மகத்தான பரிசுத்த ஆவியானவரே அறையில் காணும்படியாக வாரும். ஒவ்வொரு ஊழியக்காரரும், ஒவ்வொரு சபையும் அக்கினிமயப் படுத்தப்படுவதாக. கர்த்தாவே, வர்த்தக புருஷர்களின் வரப்போகும் கூட்டமானது இந்த நகரத்திலுள்ள ஒவ்வொரு வர்த்தக புருஷனின் இருதயத்திலும் தேவனுக்காக அனல் மூட்டப்படுவதாக. கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று அறியாதிருக்கிறோம், அது நிறைவேறும் என்று வேண்டிக் கொண்டு, விசுவாசிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக நாங்கள் எங்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம். இப்பொழுது நாம் எழும்பி நிற்போமாக. 239. எனக்குப் பேச்சுத் திறன் குறைவு, வார்த்தைகளைத் தவறாக உச்சரிக்கிறேன், நான் கட்டாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததால்தான் இதைக் கூற விரும்புகிறேன். "தேவனுடைய இசை கருவியின் இசை" என்று நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், இங்குள்ள எத்தனை பேர் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். உங்களுக்கு நன்றி. நல்லது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 240. அப்பொழுது, அது ஒரு இசை கருவியின் இசை, பாருங்கள். அது ஒரு இணைப்பிற்கு வருவதை நீங்கள் கண்டறிவீர்கள், எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். நான் அதை இணைப்பு என்று அழைக்கிறேன். எனக்கு இசை தெரியாது; இங்கே ஒரு இசைக்கலைஞர், ஏன், அவர்-அவர் என்னுடைய கரடு முரடான வழியை மன்னிப்பார். ஆனால், அது, அவைகள் இசைத்துக் கொண்டிருக்க, செயல்பட ஏதோ ஒரு காரியம் இருக்க வேண்டும். அது உண்மையாகவே மிகவும் தாழ்வாகச் செல்லும், அது என்னவென்று நீங்கள் வியப்புறுகிறீர்கள்; ஆனால், பாருங்கள், நீங்கள் அதனுடைய தாளத்திற்குள் சென்றால், நீங்கள் அதைப் புரிந்துகொள்கிறீர்கள். அந்த ஒரே வழியில்தான் நீங்கள் தேவனைப் புரிந்து கொள்ள முடியும், அது அதனுடைய தாளத்திற்குள் பிரவேசிப்பதேயாகும். 241. 'அது என்ன? நான் எப்படி செல்வேன்? சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு உண்மையான மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது பெந்தேகோஸ்தே." அது தாளம் அல்ல. 242. தாளம் என்பது தேவன். தேவன் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தை தேவனாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதே தேவனுடைய தாளமாகும். அப்படியானால் நீங்கள் வார்த்தைக்கு கீழ்படியும்போது, அவர் உங்களுக்கு சரியாக தாளத்தை கொடுக்கிறார், அப்பொழுது நீங்கள் உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். அது கீழே, கீழே, கீழே, மேலே, அது என்னவாயிருந்தாலும், நீங்கள் அந்த இணைப்புகளை அறிவீர்கள். சில சமயங்களில் நீங்கள், ஓ, இருதய வேதனைகளும், சோதனைகளும்!" என்று கூறலாம். 243. தேவன், "நான் என்னுடைய இசைக்கருவியின் இசையை வாசித்துக் கொண்டிருக்கையில், அவரில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்" என்று கூறவில்லையா? அப்பொழுது நீங்கள் பாதிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, பரிகசிக்கப்படுவதை நீங்கள் கண்டறிகிறீர்கள். அந்தவிதமாகவே அந்த பாகம் செல்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது அவ்விதமாக இல்லையென்றால், அப்பொழுது இசைக்கருவியின் தாளத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். 244. மகத்தான இசையமைப்பாளர் அதில் என்ன உள்ளது என்பதை சரியாக அறிந்திருக்கிறார். அவர் அறிந்திருக்கிறார். அவர் உங்களை ஆதி முதல் அறிந்திருந்தார். உலகத்தோற்றத்திற்கு முன்னரே அவர் உங்களுடைய பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அது எவ்வளவு தாழ்வாக இருந்தாலும், அது எவ்வளவு இருளாய் காணப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது அந்தவிதமாக இருக்க வேண்டும். 245. ஆனால் நினைவிருக்கட்டும், அது மரணத்தின் நிழல்களுக்குள்ளாகச் சென்றால், "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; நான் அவனை மீண்டும் எழுப்புவேன்." அந்த மகத்தான இயக்குனரானவர் இறங்கி வந்து, முரசு கொட்டி, "இனி காலம் செல்லாது" என்று கூறுகிறார். அந்த தூதன், வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரம், ஒரு பாதத்தை தரையின் மேலும், ஒரு பாதம் சமுத்திரத்தின் மீதும் வைத்து, அவருடைய தலைக்கு மேல் ஒரு வானவில் இருக்க, "இனி காலம் செல்லாது" என்று அவர் ஆணையிட்டார். அந்த நேரம் வரும்போது, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்திருப்பீர்கள். மற்றவர்கள் அங்கே கிடக்கும்போது, நீங்கள் உள்ளே செல்வீர்கள். 246 இசைக்கருவியின் இசையில் தரித்திருங்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். அது எவ்வளவு கடினமாயிருந்தாலும், தேவன் இசைத்துக் கொண்டிருக்கிற இடமெல்லாம் அதனோடு தரித்திருங்கள். 247. சில சமயங்களில் உங்களை விடுதலையாக்க, கட்டுகளை அவிழ்க்க அவர் தொல்லையை உண்டுபண்ணுகிறார். அவர் அதைச் செய்கிறார். நீங்களோ, "சரி, நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறலாம். அவருக்கு தெரியும். என்ன வித்தியாசம்? நீங்கள்-நீங்கள் அதில் பங்கு வகிக்கிறீர்கள். அவரே உங்களை அவருடைய கரத்தில் வைத்திருக்கிறார். அவர் உங்களை வழிநடத்துகிறார். 248. நினைவிருக்கட்டும், அவை யாவும் ஒரு அடையாளத்தினால் செய்யப்படுகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தை, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அடையாளத்தைக் கொண்டு, இன்றைக்கு இசைக்கருவியின் இசை என்ன செய்கிறது என்பதை நாம் அறிவோம். இது இருளிலிருந்து வெளிச்சத்தை எடுத்துப் பிரிக்கும் ஒரு நேரமாய் உள்ளது. 249. நீங்கள் அதை மறந்துவிடாதபடிக்கு, நாம் இதை ஒன்று சேர்ந்து கூறுவோம், ஏனென்றால் நான் இதைக் கூற உணருகிறேன்: "அது இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்துக் கொண்டிருக்கிறது." நாம் அதை மீண்டும் கூறுவோம்: "அது இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்துக் கொண்டிருக்கிறது." 250. அது தேவனுடைய இசைக்கருவியின் இசை. அவர் அதை வானங்களில் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் அதை கரும்பலகைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் தாமே அதைக் காண்பித்துக்கொண்டிருக்கிறார். அவர் அதை வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது ரூபகாரப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம். அவர் பதரையும் கோதுமையையும் பிரிக்கிறார். அவர் இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்துக் கொண்டிருக்கிறது. 251. நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், நாம் நம்முடைய நல்ல பாடலைப் பாடுவோம். 252. நான் போதகர்களுக்கு ஒரு நிமிடம் ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். சகோதரர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய சபையோரை அங்கிருந்து, அவர்களை இங்கே கொண்டு வந்ததற்காக உங்களுக்கு நன்றி. அங்குள்ள போதகர்களாகிய உங்களுக்கு, நான் நிச்சயமாகவே உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இங்கே... 253. சகோதரர்களே, நான் கூறட்டும், மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் இருக்கலாம். நான் பெந்தெகொஸ்தேயினரிடத்தில் பேசினது போன்றே நான் உங்களிடத்தில் பேசுகிறேன் என்பதை நீங்கள் கேட்கிறீர்களா? அதேவிதமாகவே, பாருங்கள். அதுவல்ல... 254. என்னால் ஒரு மனிதனுடன் தீவிரமாக கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், இன்னமும் அவனிடத்தில் அன்பு கூறினால்... ஏனென்றால், நான் அவரோடு இணங்கவில்லையென்றால், நான் இணங்காதவன் என்பதற்காக, நான் ஒரு மாய்மாலக்காரனாக இருக்கிறேன்; நான் இங்கே எழும்பி நிற்க தகுதியற்றவன். ஆனால் ஐக்கியம், அன்பு, புரிதல் காரணமாக நான் அவரோடு இணங்கவில்லையென்றால், அவர் என்ன செய்தாலும் கவலைப்படாமல், அவர் இன்னமும் என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரன். நான் அவரோடு நிற்கிறேன். ஆம், உண்மையாகவே. அது முற்றிலும் உண்மை. அது என்னுடைய இருதயத்தில் இல்லையென்றால், அப்பொழுது தேவன் என்னை இந்த பிரசங்க பீடத்திலிருந்து வெளியே கொண்டு செல்வார், நான் இங்கே இருக்க தகுதியற்றவன். அது உண்மை. நான் அன்பின் நிமித்தமாக அதைக் கூறுகிறேன், ஏதோ ஒன்று வருவதை நான் காண்கிறேன். அவர் இதுவரை நான் அதன் பேரில் தவறாக இருக்க அனுமதிக்கவில்லை, ஏனென்றால் அது எப்பொழுதுமே அவருடைய வார்த்தையாகவே இருந்து வருகிறது. எனவே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 255. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் வணங்கி, நாம் வழக்கமாக பாடும் இந்த நல்ல, பழைய பாடலைப் பாடுவோமாக, "நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்." இசைப்பேழையை இசைப்பவர், அல்லது அது யாராயிருந்தாலும், அல்லது இசையை இசைப்பவர்கள், அதன் மேல் ஒரு சிறு சுருதியை நமக்குத் தருவார்கள் என்று, நான் யூகிக்கிறேன். ஆம், சரி, அப்படியானால் நாம் அதை இசை இல்லாமல் பாட முடியுமா என்று பார்ப்போம். இப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்து நம்முடைய தலைகளை வணங்கியிருப்போம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தினிலே. 256. அவர்கள் இப்பொழுது ஒலிநாடாக்களை நிறுத்திவிட்டனர் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள், இந்த ஒலிநாடா செல்லுகிற ஒவ்வொரு... 64-0119 ஷாலோம் TAMIL (c)2025 VGR, ALL RIGHTS RESERVED VOICE OF GOD RECORDINGS, INDIA OFFICE 19 (NEW NO: 28) SHENOY ROAD, NUNGAMBAKKAM CHENNAI 600 034, INDIA 044 28274560 ⚫ 044 28251791 india@vgroffice.org VOICE OF GOD RECORDINGS P.O. Box 950, JEFFERSONVILLE, INDIANA 47131 U.S.A. www.branham.org பதிப்புரிமை அறிவிப்பு எல்லா உரிமைகளும் தனியாருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் தனிப்பட்ட உபயோகத்திற்கோ அல்லது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு ஒரு கருவியாக வெளியே விநியோகிக்கப்படவோ வீட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பிரதியிலிருந்து நகல் எடுக்கும் இயந்திரத்தின் மூலம் பிரதி எடுக்கலாம். இந்தப் புத்தகம் Voice Of God Recordings (r) நிறுவனத்தின் மூலம் எழுதிக்கொடுக்கப்பட்ட அனுமதி வெளியீடின்றி விற்கப்படவோ, பேரளவில் மீண்டும் அச்சிடப்படவோ, இணையதளத்தில் வெளியிடவோ, மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற முறையில் சேமித்து வைக்கப்படவோ, பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவோ அல்லது நிதி திரட்ட வேண்டுகோள் விடுக்கும்படி உபயோகப்படுத்தவோ இயலாது. மேலும் கூடுதலான விபரங்களுக்கு அல்லது கிடைக்கக்கூடிய மற்ற பிரதிகளுக்கு தயவுகூர்ந்து தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: VOICE OF GOD RECORDINGS, INDIA OFFICE 19 (NEW No: 28) SHENOY ROAD, NUNGAMBAKKAM CHENNAI 600 034, INDIA 044 28274560 ⚫ 044 28251791 india@vgroffice.org VOICE OF GOD RECORDINGS P.O. Box 950, JEFFERSONVILLE, INDIANA 47131 U.S.A. www.branham.org 2 SHALOM ஷாலோம் 2